பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

55



சொல்ல முடியாமல் திண்டாடினான் இராமன், அருகிருந்த இலக்குவன் அண்ணனே வெகுண்டான். ஆரியனாகிய பிறந்த பிறகு நமது ஆரிய குல சந்ததிக்கே இழுக்கையுண்டாக்கினாய் என்று சினக்கிறான். "குரியன் மரபுக்குமோர் தொன்மரு ஆரியன் பிறந்தாக்கினை யாமரோ" என்கிறான் இலக்குவன்.

நான்காவதாக:-இவ்வளவு சகோதர வாஞ்சையை வளர்க்கிற நல்லவர்கள் என்று கம்பனால் வர்ணிக்கப்படுகிற இவர்கள் நாணையமும் யோக்கிய பொறுப்பும் இருந்திருந்தால், அண்ணனேனைக் காட்டிக்கொடுக்க தன்னிடம் தஞ்சமடைந்த விபீஷணனுக்கு என்ன சொல்லியிருக்கவேண்டும். விபீஷணா நீ உன் உடன் பிறந்தானுக்கு துரோகம் செய்யாதே. நீ அங்கேயே போ' என்று அவனுக்கு நாற்புத்தி புகட்டி அனுப்பியிருக்கலாம். இந்த இடத்தில் இராமாயணத்தைப் பக்தி பரவசத்தோடு கொண்டாடுகிற உங்களில் சிலர் முகம் சுளிப்பதைக் காண்கிறேன். ஏன், இந்த இடத்தில் நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாமா என்று எண்ணுகிறீர்கள். நான் உங்களுக்கு அந்த வேலையைக் கொடுக்காமல், நானே அந்த கேள்வியை எழுப்பி விடையைக் கண்டுபிடிப்போம். இராவணன் அக்ரமமாக சீதையைத் துக்கிச் சென்றதால் அவன் தண்டனைக்குள்ளாக வேண்டியவன் என்பதும், அவ்வளவு கொடுமையான வனை தன் அண்ணன் என்று சொல்ல மனமில்லாமல் இராமனிடம் தஞ்சமடைந்தான் விபீஷணன் என்று கேட்கலாமா என்றுதான் நீங்கள் நினைக்கின்றீர்கள். ஆனால் இதே முறையை இராமன் குடும்பத்துக்குவைத்துப் பேசுவோம். சூர்ப்பனகையை இராம்ன்