பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

இலங்கை எதிரொலி



சுட்டிக்காட்ட முடியாத சில பாகங்களை துண்டித்த போது அந்த செய்கை மகாக்கொடியதென இலக்குமணனுக்குபட்டு, உடனே இராவணனிடம் ஒடி சரணாகதியடையவில்லை. இங்கேதான் ஆரிய இன உணர்ச்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஐந்தாவதாக :-அப்படி ஓடிவந்த விபீடணனைக் கேட்கின்றான் இராமன், உன் மற்றோர் அண்ணன் கும்பகர்னனைக் கொன்று விடலாமா என்று கேட்கிறான். எவ்வளவு நெஞ்சுத் துணிவிருந்தால் அண்ணனைக் கொல்ல தம்பியிடமே யோசனை கேட்டிருப்பான் என் பதைக் கொஞ்சம் விருப்பு வெறுப்பில்லாமல் சிந்தித்துப் பாருங்கள். அப்படிக்கேட்ட இராமனுக்கு, அண்ணனைக் கொல்லுவதில் பயனில்லை. கூடுமானால் அவனே (கும்பகர்னனை) யும் நம்மோடு சேர்த்துக்கொண்டு இராவணனைத் தொலைத்துவிடலாம். என்ற யோசனையைப் பின்வரும் அடிகளால் விளக்குகின்றான் கம்பன். கொன்றோரு பயனுமில்லே கூடுமேற் கூட்டிக்கொண்டு நின்றதுபுதிரி என்றனன் நிருதர்கோன் நிருதர்க் கோனாகிய விபீடணன், அண்ணனைக் கொல்வதால் ஒரு பயனுமில்லை. கூடுமானால் நம்மோடு சேர்த்துக்கொண்டு மற்ற காரியங்களைச் செய்வோம், என்கிறான்.

ஆறாவதாக :-இப்படி யோசனைசொன்ன விபீடணனையே இந்த தரகு வேலைக்கு அனுப்பி வைக்கின்றான். அண்ணனத் தன் பகைவனிடம் சேர்க்கத் தம்பியே தூது செல்கிறான். இது அரசன் மகன் இராமன் மக்களுக்கு கற்றுக்கொடுத்த சகோதர வாஞ்சைதானா என்பதையும் நீங்கள்.தயவுசெய்து சிந்திக்கவேண்டும்.