பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

57



ஏழாவதாக :-இவ்வளவு துணிவோடு சென்ற விபீடணன் முகத்திலறைந்ததைப்போல் பதில் சொல்லி யனுப்புகின்றான் கும்பகர்னன். இராமனிடம் நான் சரணாகதி யடைந்ததைப்போல் நீயும் அடைந்து விட்டால் இலங்கையை உனக்கே அளிப்பதாகச் சொல்கிறான், ஈரேழு உலகங்களிலுள்ள பகை தீரும் என்கிறான், தேவர்கள் நண்பர்களாவார்கள் என்கின்றான்.

செம்பிட்டுச் செய்த விஞ்சித்திருநகர் செல்வம்தேரி, வம்பிட்டுத்தெரிய லெம்முனுயிர்க் கொண்ட பகையை வாழ்த்தி, கும்பிட்டு வாழ்கிலேன் யான், கூற்றையும் ஆடல் கொண்டேன். மிக கேர்த்தியான தங்கத்தாலாக்கப்பட்ட கனக மாளிகையை உடைத்தாயிருக்கிற இலங்கையை எனக்களிக்க இவன் யார். அப்படியே அவன் தருவதாயினும், எனக்கு முன் பிறந்தவனைக் கொல்ல வேண்டுமென்று முடிவுகட்டிவிட்டவனையா நான் கும்பிட்டு வாழப்போகிறேன். அதற்குமாறாக எமனிடம் போராட அழைத்திருக்கின்றேன். அந்த துரோகி நியாகவே இரு. என்கிறான், கும்பகர்னன். அண்ணன் இராவணன் செய்தது அக்ரமம் என்று மீண்டும் சுட்டிக் காட்டுகின்றான் விபீடணன் அதற்கும் கீழ்வருமாறு பதில் அளிக்கின்றான். திருத்தலாம் தீராதாயின் பொருத்தொரு பயனும் உண்டோ போர்த் தொழில் புரிவதல்லால் அப்படியே அண்ணன் அடாது செய்திருந்தால் திருத்துவோம். திருந்தவில்லையென்றால் அவணோடு பிறந்ததற்காக போரில் இறப்பது தவிர வேறு நல்வழி எதுவுமில்லை என்றான் கும்பகர்னன். இனி பொருத்திருந்தும் பயனில்லை. வெட்கித் தலை குனிந்து வந்தவழி நடந்தான் விபீடணன். இந்த இடத்