பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

61


துப் பாருங்கள். என்று கேட்டுக்கொண்டு, இன்று உங்களிடையே இதைத்தான் பேசித் தீரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட, நாவலபிடியர் தமிழ் மறுமலர்ச்சி மன்றத்தாருக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் கூறிக்கொண்டு என் சொற்பொழிவை முடிக்கின்றேன். வணக்கம்.

கல்லூரிப் பேச்சு

8-8-53ல் கேதட்ரல் கல்லூரியில் பகல் 12 முதல் ஒரு மணி வரை, ‘புது உலகம்’ என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.

தலைவர் அவர்களே! மாணவ மாணவிகளே! தென்னாட்டிலே இருந்து வந்த எங்களை மனமாரப் பாராட்டி, இந்த கல்லூரியிலே எங்களைப் பேசவைக்க வேண்டும் என்று இன்றைய கூட்டத்தின் தலைவரும், ஏன்? எப்போதும் உங்கள் தலைவருமான பிரின்ஸ்பால் அவர்கள் எண்ணப்படி நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறோம். அதுவும், 'புது உலகம்' என்ற பொருள் பற்றிப் பேசவும் பணிக்கப்பட்டிருக் கின்றோம். இங்கே பேச வந்திருக்கின்ற எங்கள் இருவரிலேயே நான் கொஞ்சம் பழைய உலகத்தான் போலவும், தோழர் தங்கப்பழம் அவர்கள் புது உலகத்தார்போலவும் வயதிலும் ஆடையிலும் காணப்படுகின்றோம். ஆனால் இவ்வளவு சிறிய காலமாறுதலைப் பற்றியல்ல நாம் பேச எடுத்துக்கொண்ட பொருள். மிகப் பழைய காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் ஏற்பட்டிருக்கும் மாறுதல் பழைய மனிதர்களின் சிந்தனா சக்திக்கே எட்டாத ஒன்றாக இருந்தது. உலகிலேயே மனிதனின் உடல் உழைப்பிலிருந்து மீளவேண்டுமென்ற பேரவாவிலிருந்து