பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

III


அதன்படியே பணிகளை வகுத்துக்கொண்டு காலம் தவறாமல் கடமையைச் செய்து முடித்தோம். போகும் போது 35 கழகங்களாக இருந்து 35 நாட்களுக்குப்பிறகு திரும்பும்போது 75 கழகங்களாக வளர்ந்ததே நாம் செய்த பணிக்குத் தகுந்த ஆறுதல் என்ற களிப்போடு இந்த கரையைச் சேர்ந்தோம். என்னோடு துணை சேர்வர் நண்பர் தங்கப்பழம். அவர் ஆற்றிய சொற்பொழிவையும் இதில் சேர்க்க எண்ணியிருந்தேன். அவரும் குறிப்பெடுத்து வைத்திருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் சிறையிலே வாழவேண்டிய அவலநிலை ஏற்பட்டதால் இதில் அவர் சொற்பொழிவு இடம்பெற முடியவில்லை

நாங்கள் அங்கு தங்கியிருந்தவரை இரவு 4, 5 மணி நேரங்கள்போக மற்ற நேரங்களெல்லாம் ஒரு பொதுக் குழுவைப் போலவே இருந்தது. யார் எங்களை வந்து பார்க்கத் தவறினாலும் பொதுவுடமைத் தோழர்கள் தவறுவதில்லை. அவ்வளவு நாட்கள் விவாதித்தும், அவர்கள் எங்களையோ நாங்கள் அவர்களேயோ சரிப்படுத்த முடியவில்லை. அந்த எண்ணத்தால் விவாதம் தொடங்கவுமில்லை. மாலை நேரங்களில் ஒரு பொழுது போக்குபோல் முடிந்தது அந்த விவாதம்.

இதில், பற்பல தலைப்புகளில் பேசப்பட்ட கருத்துகளே வெளியிடுவதின்மூலம் அந்த காட்டு அரசியலைப் பற்றியும், அந்த நாட்டில் உள்ள நம் மக்களின் நிலையைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள பொதுமக்களுக்கும், குறிப்பாக நமதியக்கத் தோழர்களுக்கும், சிறப்பாக நமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலங்கை_எதிரொலி.pdf/7&oldid=1318910" இலிருந்து மீள்விக்கப்பட்டது