பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

இலங்கை எதிரொலி


கடற்கரை

11--5--53ல் கால்பேஸ் (கடற்கரை) பொதுக்கூட்டம். சுமார் ஒரு இலட்சம் பேர்கள் கூடியிருந்தனர். இலங்கையில் இதுவரை ஒரு அரசியல் கட்சிக்காரர்கள்கூட இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டியதில்லை என்று பல பிரபல பத்திரிக்கைகள் புகழ்ந்தன. பொதுமக்கள் பாராட்டினார்கள். அரசாங்கம் அதிர்ந்தது. மற்றக் கட்சிகளின் கவனத்தைத் கௌவிய கூட்டம் இது. இதற்குப் பொதுமக்கள் மாத்திரமன்னியில் பிரபல உத்தியோகஸ்தர்களும் பேராதரவு தந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதில் சிற்றரசு ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் :

தலைவர் அவர்களே! தோழர்களே! வணக்கம். இங்கே தோட்டக்காடுகளில் வதியும் தமிழர்களுடைய நிலை, எங்கள் பகுதியிலே சேரியிலே வாழ்கிற மக்களுடைய வாழ்க்கைத்தரத்தைவிட மிகக் கேவலமாக இருக்கிறது. பார்க்கவே மிகப் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றார்கள். பொருள்களின் விலையேற்றத்துக்கும் குறைவுக்கும் ஏற்ற அளவுதான் அவர்களுக்கு பஞ்சப்படி கொடுக்கப்படுகிறது. நூறு பிள்ளைகளுக்குக்கூட ஒரு ஆசிரியர் அமர்த்தப்படவில்லை. 4, 5 பேர்கள் வாழ்வதற்கென்று அவர்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிற வீடுகள் குகைகளைக்காட்டிலும் மிகக் கேவலமாக இருக்கின்றன. ஓட்டுரிமையில்லை. குடியுரிமை பெறபடாத பாடுபடுகிறார்கள். இங்கேயே வாழ நினைக்கும் வாலிபர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம்