பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

71


கள் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். இது ஒருவகையில் வெற்றிதான், என்றாலும் வெள்ளைக்கார முதலாளிகளைப் பார்த்து அவர்களும் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம், அதாவது, பூனை கண்களோடு தோட்டத்தைச் சுற்றிப்பார்க்க வெள்ளை முதலாளி வரும்போது அவரை பார்ப்பதற்கே பயமாயிருக்கிறது. ஆகையால் வெள்ளையர் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வரும்போது கண்களில் துணியைக் கட்டிக்கொண்டுதான் வரவேண்டும், இல்லையானல் அவர்கள் வரவே கூடாது என்று திருப்பி இவர்கள் கேட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.நேற்று தான் பத்திரிகையில் பார்த்தேன். வெள்ளை முதலாளிகள் 25-கோடி ரூபாயைக் கொண்டுசென்றிருக்கின்ருர்கள். ஆனால் தொழிலாளி தன் தாயகத்திற்கு 25-ரூபாய் அனுப்பமுடியாமல் திண்டாடுகிறான். பூசனிக் காய் போகின்ற இடம் தெரியவில்லை. கடுகு போகும் இடத்தைத்தான் கண்டுபிடிக்க அலைகிறது இந்தச் சர்க்கார் என்று கேட்டிருந்தது அந்தப் பத்திரிக்கை. உண்மைதான், வெள்ளையர் தங்கள் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளில் தாங்கள் செலுத்திக்கொண்டிருந்த ஆதிக்கத்துக்கு இனிமேலும் அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் தொழிலுக்கும், வைத்துக்கொண்டிருக்கும் சொத்துக்களுக்கும் எவ்வித ஆபத்தும் வராமல் சட்ட பாதுகாப்பு செய்துகொண்டுதான் அவர்கள் சுதந்திரம் வழங்குவது வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்

வெள்ளையர்கள் வாழ்ந்த எந்த நாட்டிலும் சரி, அவர்கள் வாழ்வும் வளமும் குன்றாமல்தான் இதுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். சுதந்திரம் அளித்து விட்டுத் தன் தாயகம் திரும்புகின்ற ஒரு தேசீய இனம்