பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

81


கொண்டதா-ரப்பர் மரங்கள் பால் சுரக்க மறுத்து விட்டனவா- கோக்கோ காய் காய்க்காமல் போய்விட்டதா- தென்னை வளர மறுத்ததா- கடலலைகள் ஓய்ந்து விட்டனவா - சிங்களத் தீவை சுராமீன் விழுங்கி வீட்டதா. என்ன கெடுதல் நடந்துவிட்டதென்று சர்க்கார் சுட்டிக் காட்டட்டும். ஆனால் ஏன் இதைச் செய்திருக்கிறது. அதுவும் நாம் அறியாததல்ல, வேறு எந்த வழியிலும் வெளியேற்ற முடியாதவர்களை எப்படி வெளியேற்றுவது அல்லது குடி உரிமை மறுப்பது என்று நீண்ட நாட்கள் சிந்தித்திருக்கிறது சர்க்கார். இந்த நூதனமான கண்டுபிடிப்பின் மூலம்தான் இரண் டரை இலட்சம் திராவிடர்களை வெளியேற்றலாம். அல்லது குடி உரிமை வழங்காமல் நிறுத்தலாம் என்பது தான் சர்க்காரின் முடிவு. இதுதான் இதில் அடங்கியிருக்கும் இரகசியம் வேறொன்றுமில்லை. காதலுக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் தடை விதிக்கிறது சர்க்கார். ‘நீ சுதந்திரமாக இருக்க விரும்பினால் பிறர் சுதந்திரத்தைப் பறிக்காதே’ என்ற வாசகப்படி, இலங்கை சர்க்கார் தனது சுதந்திரப் பாதையிலே செல்ல விரும்பினால் அது பிறர் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது. தோட்டத் தொழிலாளிகள் சுரண்டிக் கொண்டு போகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் எவ்வளவு சுரண்டிக் கொண்டு போகிறான் என்பது நம்மைவிடச் சர்க்காருக்குத் தெரியும். ஒருவன் வருவாயை என்னென்ன செய்யவேண்டுமென்பதும், எவ்வளவு செலவழிக்கலாம் என்று சர்க்கார் தந்திருக்கின்ற பட்டியலில் போதை தரும் குடியை இவ்வளவு குடிக்கவேண்டும் என்ற பகுதியையும் சேர்த்து வெளியிட்டிருக்கும் அறிக்கை-