பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

87


இருப்பதைப்போல், இங்கேயும் சிங்களவர் - தமிழர் பிரச்சினைகளைப் பின்னிவிடலாமா என்று யார் நினைத்தாலும், எந்த கட்சி முடிவு கட்டினாலும், எந்த பலம் பொருந்திய சர்க்கார் நினைத்தாலும் நிச்சயமாகத் தோல்வியடையும். அங்கே ஆரியர் திராவிடர் பிரச்சினை போன்றதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. இங்கே இருக்கும் சிங்களத் தோழர்களுக்கும் திராவிடத் தோழர்களுக்கும் சமூக சம்மந்தமாக எந்த ஏற்றத் தாழ்வுமில்லை. பொதுவாக நாங்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்ததில் முக்கியமாகத் தெரிந்துக் கொண்டது, இனம், நிறம், இடம் என்ற பாகுபாடில்லாமல் மக்கள் அனைவருமே ஒரே இனத்தவர் போல் வாழ்கின்றார்கள். இந்த இடத்தில் எப்படி வகுப்பு பூசல்கள் எழ முடியும், தீர்க்க முடியாதென்ற நிலையிலே வளர்ந்து வரும் அரசியல் பிரச்சினையை மறைக்க வகுப்புக் கலவரம் என்ற போர்வையைத் தேடுவது அரசியல் விவேகமல்ல, எல்லா இன மக்களும் ஒன்றாக வாழவேண்டுமென்று நினக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கையைப்பொறுத்த வரை கண்டிப்பாக வகுப்பு கலவரத்துக்கு இடம் கொடுக்காதென்பதை உறுதியாகச் சொல்லுகின்றோம்.

இந்தியாவில் வகுப்புக் கலவரங்கள் இருப்பதற்குக் காரணம் வகுப்பின் பேரால் சாத்திரத்தாலும், சம்பிர தாயத்தாலும் உயர்வைக் கற்பித்துக் கொண்டு ‘தொடாதே’ என்று அதட்டும் அறிவிலி அங்கே இருக்கின்றான். காலில் செருப்புப் போட்டுக்கொண்டு ‘அக்ராகாரத்தில் நுழையாதே’, என்று. சொல்லும் கயவாளி இருக்கின்றான். சமூகத்தின் நெஞ்சை நெறித்துக் கொல்லும் சண்டாளன் இருக்கின்றான். மனித