103
வயதான ஸ்திரீ ஒருத்தியும் இருந்தாள். பொதுச் சொத்தான தானியத்தைத் திருடிவிட்டு அகப் பட்டுக்கொண்டவள் அக் கிழவி. வேடிக்கை பார்த்த வர்களைக்கூட அவன் நோக்கவில்லை. அவர்களுக்கு நடுவில் சுறுசுறுப்பு மிகுந்த, கட்சிச் சார்பு கொண்ட வர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
அந்நேரத்தில், தலைவர்கள் வெவ்வேறு பிரிவு களின் முன்பாகப் போய், பலவகைப்பட்ட குழுக்களை நெருங்கி, அவர்களிடம் தாங்கள்தாம் நீதிபதிகள், ஜூரிகள் என்று நினைவுபடுத்திப் பேசினர்கள். குற்ற வாளிகள் என்று நிர்ணயிக்கப்பட்ட கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை நேரில் பார்க்கக்கூடாது என்றே கிராமமக்கள் நினைத்தார் கள். மண்டியிட்டு இருந்த அவ்வுருவங்கள் வேண்டு மென்றே மெளனம் சாதித்தன. அவர்களது குனிந்த தலைகளும் முதுகுகளும் கொதித்துப் பொசுக்கிய வெய்யிலுக்கு ஆளாகியிருந்தன; அவற்றில் ஏற் கெனவே வேர்வை பெருகி ஓடிக்கொண்டிருந்தது. எப்போதாவது ஒருவன் கண்களில் அச்சத்துடன் மெல்லத் தலையை உயர்த்திப் பார்த்தான்.
அது ஒரு பெரிய விவகாரம். அந்த மேலதிகாரி அங்கு நடந்து முடிந்திருந்த நடப்பின் காரணமாக மிகுதியான கோபாவேசம் கொண்டிருந்தான். மக்கள் செய்த ஒரு செயலுக்காக, அவன் வெட்கத் தால் குமுறின்ை. பொதுவுடைமைத் தத்துவ அமைப்புப்பற்றிய புரட்சிகரமான போக்கையோ, அல்லது அதைப் புரிந்துகொள்ளும் தன்மையையோ அல்லது அவர்களது பலகாலப் பயிற்சி போதித்தது.