உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


'அப்பா, நேரத்தை நாம் வீணடிக்கக்கூடாது. நம் நண்பரிடம் விஷயத்தை விளக்கிச் சொல்வீர் களா?” "நிச்சயமாக." டுவானின் கண்கள், ஒன்று சேர்ந்த புருவங் களுக்கு அடியில் பிரகாசித்தன. அவன் குரலில் கடுமை தொனித்தது; நிரம்பச் சொல்லவேண்டு மென்று விரும்பியவன் போலவும் எங்கே ஆரம்பிப் பது என்று புரியாமல் இருப்பவன் போலவும் தோன்றியது. - - 'நீங்களும் ஈஸுவும் போட்டிருக்கும் திட்டங் களை நான் புரிந்துகொள்கிறேன். அதிகமான ஆபத் திற்குள்ளாகும் ஒரு செயலினை நீங்கள் துணிச்ச லுடன் மேற்கொண்டிருக்கிறீர்கள்; அதன் மதிப்பைச் சரியாக உணர்கிறேன் நான்.” 'நலி....நலி! பேஷ்!” என்ருன் ஜேம்ஸ், சரளமான மரியாதைமிக்க மன்டாரின் மொழியில். 'மன்டாரின் மொழியை அழகாகப் பேசு கிறீர்கள் நீங்கள்." 'பூகன்டாங்-பாராட்டுக்கு நன்றி!” ஈஸ நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். "நீங்கள் இரண்டுபேரும் இப்படியே புகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டிருந்தால், நாம் பேசத் தொடங்கவே முடியாது.” ஜேம்ஸை கிழவன் ஆழ்ந்து நோக்கினன்; மெள்ள இருமினன்; ஆவலுடன் ஆரம்பித்தான்; "தன்னேடு நானும் என் பேரனும் வரவேண்டு மென்பதே தனது ஆவல் என்று உங்களிடம் FF©Ꮙ7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/158&oldid=1274902" இலிருந்து மீள்விக்கப்பட்டது