22
மூக்குக் கண்ணுடியுடன் ஸெங்கைச் சந்திக்கச் சென்ருன்.
வெஸங் தன் உத்தியோகத்தில் நீண்டகால அனு பவம் பெற்றவன். ஏனனே நோக்கி நடந்த நீண்ட ஊர்வலத்தில் அவன் கலந்துகொண்டவன். ஒல்லி யாகவும் பல ஹீனமாகவும் இருந்தான். ஐம்பது பிராயமுள்ள அவனது மெல்லிய குரல், இளமை மிக்க டெங்பிங்கை நடுநடுங்கச் செய்துவிடும். ஆனல், ட்ஸெங் இயல்பாகவே பெருந்தன்மையானவன். டெங்பிங்கிடம், ஒரு பிரியம். அவன் மிகவும் சுறு சுறுப்பான தன்மையோடும் ஆக்கிரமிப்புக் குணத் துடனும் கட்சி'யின் பொதுவுடமைச் சித்தாந்தத் தைச் செயற்படுத்தி வந்ததைக் கண்டு ஸெங் மகிழ்ச்சியடைந்தான்.
"தோழர் ஸெங் அவர்களே! நன்ருகத் துரங்கி aர்களா?” என்று டெங்பிங் கேட்டான்.
'மிகவும் நன்ருகத் துரங்கினேன் தோழரே!” என்று பதில் சொன்னன் ஸெங். -
'அறை ஏற்பாடு செய்யும் முன் அந்த மெத் தையை நானே சோதித்துப் பார்த்தேன். ஏதாகி லும் அசெளகர்யம் இருந்தால், என்னிடம் தெரிவித் தால் நல்லது!"
"நான் நன்முகத் தூங்கினேன் என்று உங்களிடம் தெரிவித்துவிட்டேனே!"
'சந்தோஷம். இன்று காலையில் என்னுடைய ஒலிபரப்புப் பேச்சைக் கேட்டீர்களா? பேச்சு எப்படி இருந்தது, எதையாகிலும் விட்டுவிட்டேன என்று