220
காணப்படுகிருள். இந்த நாட்டுப்புற பெண்டிர் மிகவும் வலுவுள்ளவர்கள்: நகர மக்களைக் காட்டிலும் அதிக வலுவுள்ளவர்கள்!”
"சரி, அப்படியென்ருல், அவளை அழைத்துச் செல்வோம். நம்முடன் படகில் அவளையும் ஏற்றிக் கொள்வோம்.”
சம்மதம் தெரிவிக்கும் கண்களால் அவனை நோக் கிளுள் ஈஸு. பிறகு மெதுவாக, செவிக்கினியதாக அவள் சொன்னுள்: "நாம் முட்டாள்தனமாக ஏதாவது செய்துகொண்டிருக்கலாம். ஆனல் யார் அறிவார்கள்?’ அவள் அமைதியுடன் ஒரு விடிை ஜேம்ஸ்ை உற்றுப் பார்த்தாள். பிறகு அவனுக்கு வேகமாக ஒரு முத்தம் கொடுத்த்ாள். “நான் இப்போது போகவேண்டும்” என்ருள்.
அவன் அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண் டான்; அவளைப் போகவிடவில்லை. அவன் கண்கள் ஆழமாக ஊடுருவிய வண்ணம் இருந்தன.” என் னுடைய எட்டுரியப் பெண் தெய்வம் நீ!” என்ருன் அவன்.
"நான் ஒரு சீனப் பெண்' என்று மகிழ்வுடன் முறுவல் பூத்தாள் ஈஸ7.
'மிகவும் சரி, என்னுடைய க்வானின்!.... என் னுடைய தொழுகைக்குரியக்வானின்....என்னுடைய கருணை மிகுந்த பெண் தெய்வமே!...நீயே எனது வாழும் க்வானின்!”
ஈஸஅவின் விழிகள் பாதி மூடியிருந்தன. அவள் இன்னும் அதிகமாகக் கேட்க விழைந்தாள். 'ஏன்' என்று வி ைவிடுத்தாள்.