ರ வாக முன்னேறி மலையடிவாரத்தை அடைவோம். உணவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இங்கு எனக்கு நண்பர்கள் இருக்கிரு.ர்கள். நாளை அவர்களைக் கண்டு பிடிக்கிறேன், நெடுஞ்சாலையை நாம் விலக்கி விடவேண்டும்; முக்கியமாக, அடுத்துள்ள லுங்காங் நீர்த்தேக்கத்திலிருந்து நாம் தப்பிவிடவேண்டும். எழுபது, எண்பது பேர்கொண்ட படை ஒன்று அங்கே நிரந்தரமாக உள்ளது.” 'இன்றிரவு எந்த இடத்தில் நாம் நம் பயணத்தை நிறுத்தப் போகிருேம்?” என்று கேட்டான் டுவான். 'நாம் சமவெளிகளிலிருந்து கிழக்கு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிருேம். சமீபத்தில் குன்றுகள் சில உள்ளன. நமக்கு அதிர்ஷ்டமும் இருந்து, அது பாதுகாப்பாகவும் இருந்தால், வெள்ளைக்கல் குகை களுக்கு நாம் செல்வோம்; அங்கு நீங்கள் நாள் பூராவும் தூங்க முடியும். இங்கிருந்து அது மூன்று மைல் துTரம்தான்!” இரவின் அமைதியினுாடே, பல நீரோடைகளைக் கடந்து சென்றது அக் குழு. குன்றுகளுக்கு மேலே, நீர்ப் படுகைக்கு அப்பால் நிலவு வந்திருந்தது. இரவுக் காற்றுமிகுந்த குளிர்ச்சியாக இருந்ததால்; நிலப் பரப்பைக் குளிர்வித்தது. 'இது ஒரு மறக்க முடியாத இரவு!” என்ருள் லெய்வா. - 'இம்மாதிரி இன்னும் பல மறக்க முடியாத இரவுகள் உங்களுக்குக் கிடைக்கும்” என்று ஃபான் பதிலளித்தான்.
பக்கம்:இலட்சிய பூமி.pdf/270
தோற்றம்