303
லெய்வாவை அடுத்து அமர்ந்திருந்த அசாய் பூரிப்புடன் புகையை மோப்பம் பிடித்தபடி, "ஆஹா! ரொம்பவும் சிறந்ததாக இருக்கிறது. நானும் சிகரெட் பிடிக்கிறேன்” என்ருன்.
அவனுக்குக் கொடுக்காதீர்கள்: அவனுக்குப் பதினைந்து வயதுகூட ஆகவில்லை” என்று தடுத்தாள் லெய்வா.
வெளியேற வழியில்லாத நாற்றமும் ஆமை ரத்தத்தின் வாடையும் மூச்சைத் திணரவைக்க அவர்கள் இருட்டில் நெருக்கியடித்து அமர்ந்திருந் தனர். படகு நகரத்தைவிட்டு விலகி வேறு வழியில் சென்றதும், நல்ல காற்று உள்ளே வருவதற்காக, பின்புறமிருந்த தடுப்பை அப்புறப்படுத்திவிட முடிவு செய்தார்கள்.
இப்போது அவர்சள் குன்றுகளை நோக்கி நீரோ டையின் உட் பகுதியில் போய்க் கொண்டிருந் தார்கள், படகு கொஞ்சம் சிரமத்துடன் சென்று கொண்டிருந்தது. படகின் இயக்கம் சிலரைத் துரங்க வைத்தது. மற்றவர்கள் மெளனமாக இருந்தனர்; ஒவ்வொருவரும் அவரவரது சொந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்த வண்ணம் இருந்தார்சள். லெய்வா வுக்கு அருகில் அமர்ந்திருந்த ஃபான், கசங்கிய காகிதத்தாள் ஒன்றை கைவிளக்கின் வெளிச்சத்தைக் கொண்டு கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். "இதோ, இதுதான் நாம் பின்பற்றிக் கொண் டிருக்கும் மார்க்கம்,' என்ருன் அவன். - ஜேம்ஸ் அதை எடுத்தான்; அதைக் கவனமாகப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக டார்ச் விளக்கை