உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:5 பட்டப்பகலில் ஒரு கமிஷனரை எந்தக் கலகக் கும்பலும் ஒருபோதும் அடித்தது கிடையாது!” "அவர் கட்டுமஸ்தான உடம்போடும், குள்ள மாகவும் சதுரவடிவான முகத்துடனும் இருந்தாரா?” 'நான் அறியேன்; அவ்வளவு நன்ருகப் பார்க்க முடியவில்லை.” - ஃபான் பின் பகுதிக்கு நடந்து சென்ருன் குழு வினர் படுத்துக்கிடந்ததைக் கண்டான். டுவான் தன் பேரனேடு துணை வீட்டில் நன்ருகத் தூங்கினன். ஈஸா மரங்களின் அடியில் உட்கார்ந்து தலைமயிரைச் சீவிச் சீர்ப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் முகம் அவ்வளவு பிரகாசமாக இருந்ததை ஃபான் அதற்கு முன் கண்டதே இல்லை. ஜேம்ஸ் தரையில் குனிந்தபடி ஊசி இலை மரத் தின் இலைகளை தட்டிச் சுத்தப்படுத்தியபடி ஈசுவைப் பார்த்துக் கொண்டிருந்தான். துணை வீட்டுக்குச் சமீபத்திலிருந்த சிறிய ஓடையில் லெய்வா முகம் கழுவிக் கொண்டிருந்தாள். சமையலறையிலிருந்து முகம் துடைக்கும் துண்டொன்றை இரவல் வாங்கிக் கொண்டிருந்தாள் அவள். - "நாம் என்ன சாப்பிடப் போகிருேம்?" என்று கேட்டாள். - - - - - - "அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தோதாக ஒரு தமாஷ் செய்தபடி, "பெர்ரி பழங்கள்!” என்று உடனே பதிலிறுத்தான் ஃபான். 'கவலைப்படாதே. இந்த அம்மாள் நமக்காகக் கொஞ்சம் கஞ்சி வைத்துக் கொடுப்பாள் என்றே திடமுடன் இருக் 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/325&oldid=752905" இலிருந்து மீள்விக்கப்பட்டது