உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328


களுக்குப் பணம் கொடுத்துவிடு; நீயாகவே போய் சிக்கவில் அகப்பட்டுக் கொள்ளாதே. விலை சல்லி சான-வேண்டாமென்ருல் நாம் வீசி எறிந்துவிடக் கூடிய-தண்ணிர்ப் பானை ஒன்று வாங்கிவா. இருட்டு வதற்கு முன்னுல் திரும்பிவிடு” என்ருன். பையன் கின்ஷானும் அவர்களோடு செல்ல முன் வந்தான். 米 ※ 杀 பிங்ஷான் நாலாயிரம் பேருக்கு அதிகமான ஜனத்தொகை கொண்ட ஒரு நகரம், ஐந்து அல்லது ஆறு வீதிகளும், ஒரு பலசரக்கு மண்டியும் ஒரு திரைப்படக் கொட்டகையும் இருந்தன. பஸ் மார்க் கங்களின் கடைசி நிலையம் அது. பையன்கள் இருவரும் சட்டைப் பைகளில் பணத்தோடு வீதிகளைச் சுற்றி மகிழ்வுடன் சென் ருர்கள். கின்ஷானுக்கும் போலீஸ்காரர்கள் அறி முகமானவர்கள், அவர்களும் அவனே நன்கு அறிந் திருந்தனர். இரண்டு மணிக்குத் திறக்கப்பட்ட திரைப்படக் கொட்டகைக்கு முன்பாக அவர்கள் நின்று கொண் டிருந்தார்கள். கொட்டகைக்கு முன் பகுதியில் இருந்த சுவரொட்டியில் துயரத்துடன் காணப்பட்ட எண்ணற்ற முகங்களுக்கு மேலே, காலைக் கதிரவ னுக்கு எதிரே துப்பாக்கியை உயரப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு குடியானவனின் புன்னகை பூத்த பிரகாசமான முகம் மஞ்சளும் கருப்பும் கொண்ட வண்ணத்தில் தீட்டப்பட்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/328&oldid=1275018" இலிருந்து மீள்விக்கப்பட்டது