உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


யென்ச்சிங் பல்கலைக் கழகத்தில் ஐரோப்பியக் கலைக்கு விரிவுரையாளனாக இருந்தவன் அவன். பீகிங்கில் இனிமேல் வசிப்பது அசாத்தியம் என்றுணர்ந்து ஹாங்காங்கில் தங்கி வீட்டுக்குரிய கருவிகள் விற்கும் கடையை ஆரம்பித்தபோது அவன் அத்தை வியப் படைந்தாள். அவனுடைய கண்களிலே மிளிரும் ஜீவன் நிரம்பிய கூர்மைமிக்க அந்தப் பார்வை அவ ளுக்குப் பிடித்திருந்தது; மற்றவர்களிலிருந்து விலகி உலகத்தை வேறு நோக்கில் பார்க்கும் ஒரு கலைஞனின் கண்கள் அவை! அந்த மிஷன்வீடு, சிவப்புச் செங்கற்களால் கட்டப்பட்ட அடக்கமான வீடு. கடந்த நூற்ருண்டில் கட்டப்பட்டது. உலந்து, வெளிறி, பழுப்பு நிறம் கொண்ட விழுதுகளோடிச் சுற்றிலும் பரவியிருந்த ஆலமரத்துக்கும் பல யூகலிப்டஸ் மரங்களுக்கும் இடையே அது இருந்தது. தோட்டத்தின் வாசலுக்கு முப்பது-நாற்பது அடி பின்புறத்தில் வீடு அமைந் திருந்தது; வாசல் கேட்டிலிருந்து உள்ளே செல்லும் கூழாங்கற்களால் ஆன பாதையொன்றும் அதற்கு இருந்தது. மரங்கள் சூழ இருந்ததால், அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. படர்கொடி களுடன் கூடிய சுவர் ஒன்று அதை ஆஸ்பத்திரியி னின்றும் இடது பக்கமாகப் பிரித்தது. தூரத்தில் இருந்த ஈஸ்ட் நதியும் கிராமப்புற சூழ்நிலையும் பின்புற ஜன்னல்கள் வழியாக கண்கவரும் தோற் றத்தைத் தந்தன. * . . . . . . உயர் வர்க்க ஆங்கிலேயர்களுக்குரிய உடல் வாகுடன் ஜேம்ஸ் தாயெர் விளங்கின்ை. உயர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/33&oldid=1274814" இலிருந்து மீள்விக்கப்பட்டது