உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 கூட்டத்தை முன்னுல் வழி நடத்திச் சென்ருன். அசாயும் ஸ்வாட்டும் வரிசையின் கடைசியில் இருந் தார்கள். குடியானவப் பெண்மணியோடு அந்தப் பையன் சிநேகம் பூண்டான்; ஏனெனில் அவள் எல்லாவற்றையும் இழந்து நிராதரவாகத்தவித்தாள் வேறு யாரிடமும் அவள் பேசுவதில்லை. அடர்த்தியாக வளர்ந்திருந்த முட்புதர்களி னூடே சென்ற ஒரு வளைவில் குழுவினர் திரும்பிய போது, அசாய் கொஞ்சம் பின்னல் இருந்தான்; அப் போது யாரோ உரத்த குரலில் கூக்குரலிட்டு அழும் சத்தத்தை அவன் செவி மடுத்தான். "லெய்வா!....லெய்வா!...” இலைகள் சலசலத்து அசைந்தன; புதர் விலகியது அடர்ந்திருந்த புதரினின்றும் கறுப்பு உருவமொன்று மேலெழும்பி, குழுவினரைப் பின் தொடர்ந்துபிடிக்க மூர்க்கத்தனமாக ஓடிவந்தது. அவனுடைய திகி லடித்த ஒலம் வேட்டையாடப்பட்ட பிராணியி னுடைய கதறலை நினைவூட்டியது. அசாய்க்கு பீதியினல் நடுக்கமெடுத்தது. அந்த ஆள் லேசாக நொண்டி நொண்டி நடந்தான். பேர்வழி குட்டையாகவும் சற்று பருமனுகவும் இருந் தான். பரந்த தோள்கள்....அந்தக் குரல்....!ஆமாம்! அது டெங்பிங்தான்!.... . அசாய் முன்னல் ஒடினன், மற்றவர்கள்,தங்களை நோக்கி வேகமாக பாய்த்தோடிவந்த அந்தப் பைத் தியக்கார உருவத்தை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டே நெருங்கிவிட்டார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/336&oldid=752917" இலிருந்து மீள்விக்கப்பட்டது