உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


மாகவும் மெலிந்தும் இருந்தான். உறுதியான முக வாய்க்கட்டை நேரான மூக்கு. பின்புறத்தில் சுத்த மாக கூடிவரம் செய்யப்பட்ட மயிர்க்கோடு இருந்தது. இதைப்பற்றி அவனுக்குத் திருப்தி உண்டாகவில்லை. எதிலும் சுலபமாகத் திருப்தி அடையாதவர்கள் ஆங்கிலேயர்கள்! அவனுடைய தந்தை: காப்டன் டொனல்ட் தாயெர். இந்தியப் படையில் முன்னர் பணி புரிந்தவர். அவன் தாயார் பெல்ஜீய நாட்டுக் காரி. ஐரோப்பாக் கண்டத்தில் கல்வி கற்ற தன்மை யிலுைம் கலைமாளுக்கன் என்னும் முறைமையி ஞலும் அவனுடைய வெளித்தோற்றத்தில் சிறிதளவு மமதை நிழலாடியது. கொழுத்த எருதுகளைப் போலத் தோன்றிய ஹாங்காங்கிலுள்ள ஆங்கிலேய வியாபாரிகளினின்று அவனுடைய முழுத்தோற்றம் அவனைப் பிரித்துக் காட்டியது. ஆங்கிலேயப் பண் புக்கு அனுசரணையில்லாத வகையில் அவன் ஹாங் காங் வீதிகளிலே அலைந்து திரிந்து சீன உண்டிச்சாலை களில் சாப்பிட்டான். கச்சிதமான பீகிங் உச்சரிப் போடு சுத்தமான மண்டாரின் மொழி பேசி, உட் நாட்டு மொழியான கான்டனிஸையும் மண்டாரின் மொழியையும் பேசிவந்த கடைகாரர்களை வியப் படைய செய்து மகிழ்ச்சி கொண்டான். "அந்த மனிதன் வீட்டுக்குரிய கருவிகளும் துரசு களைத் துடைக்கும் இயந்திரங்களும் விற்கும் ஒரு கடை வைத்திருக்கிருனே! நாங்கள் அவனை வெளி யேற்ற முடியாது!’ என்று சக ஆங்கிலேய வியாபாரக் கூட்டாளிகள் சிலர் சொல்லிவிட் டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/34&oldid=1274815" இலிருந்து மீள்விக்கப்பட்டது