உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343


"அவளுல் எவ்விதம் முடியும்?' என்று விடை பகர்ந்தான் ஃபான். சிறிது நேரத்திற்கெல்லாம் குழுவினர் புறப் படத் தீர்மானித்தனர். கடமையிலிருந்து தவறி, அபாயத்திற்குப் பயந் தோடிய அந்தக் கமிஷனரை கண்காணிக்க அசாய் முன்னே சென்ருன். ஸ்வாட்டும் அவனைத் தொடர் ந்து சென்று கொண்டிருந்தாள். சிறிது தூரம் சென்றதும், அவர்கள் மீண்டும் வடக்கே திரும்பினர். அங்கு பாதை சரிந்து ஓடியது; வெய்யில் பூரணமாகக் காய்ந்தது. இவ்விடத்தில் அருகிலிருந்த சுண்ணும்புக்கல் சிகரங்களின் கரடுமுர டான விளிம்புகள் தெளிவாகத் தெரிந்தது; மறை வாக இருந்த கணவாய் ஒன்றும் தெரிந்தது. வேக மாகப் பாய்ந்தோடும் சிற்ருறு ஒன்று பாறைகளைப் பிளந்து கொண்டு சுமார் இரு நூறு அடி கீழே சுழன் ருேடியது. அந்த இடம் ஆழமாக இருந்தது. "இன்னும் கால்மணி நேரத்தில் வடதிசைச் சாலையை நாம் அடைந்துவிடுவோம்; இனி நாம் ஒன்ருய்ச் சேர்ந்து உஷாராக இருக்கவேண்டும்!”. என்ருன் வழிகாட்டி. அங்கே ராணுவ வீரர்கள் இருப்பார்களா?” "அநேகமாக இருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இங்கிருந்து பிலிங்சூனுக்கு இன்னும் ஒருமைலோ சற்று கூடுதலாகவோ இருக்கும். ஆனல் பாதை நெடுகிலும் ஒரே கரடுமுரடு.” முன்னல் செல் லும் இருவரையும் அழைத்து தங்களுக்காகக் காத்து நிற்கும்படிக் கூறினன். மற்றவர்களுக்கு சுமார் ஐம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/343&oldid=1275025" இலிருந்து மீள்விக்கப்பட்டது