345
களே! காட்டுப் பன்றியைப் பிடிக்க வலை விரிக்கப் பட்டிருக்கிறது” என்ருன் சைசாம்.
சாலையிலிருந்து பத்தடி தள்ளி புதர் நிறைந்த வழியில் பசுமையான மரக்கிளைகளின் குவியலைச் சுட்டிக்காட்டி உங்களை எச்சரிக்க மறந்துவிட்டேன். அது என் தவறுதான் என்ருன் வழிகாட்டி சைசாம். மறுபடியும் அவர்கள் நிம்மதியாக நல்ல மூச்சு விட்டார்கள்; அவர்கள் களத்திற்கு வந்துவிட்டனர் அங்கு பாதை க ண ச மா. க அகன்றிருந்தது. குன்றின் வட பகுதியினின்றும் சாலையொன்று கீழிறங்கி நேராக முன்னேக்கிச் சென்றது;
முச்சந்தியில் ஒரு கணம் தயங்கி நின்றுவிட்டு பிறகு வலப்பக்கம் ஏறிறத்தில் ஏறிக்கொண்டிருந்த டெங்பிங்கின் கரிய தனி உருவம் தென்பட்டது.
"அதுதான் பிங்ஷானிலிருந்து வரும் சாலை. அவன் நகரத்துக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருக்க வேண்டும்; அல்லது, இப்போது வழிதவறியிருக்க வேண்டும்'என்ருன் ஃபான்,சற்று அனுதாபத்துடன். சாலையிலிருந்து சிலர் இறங்கி வந்துகொண்டிருந் ததை சைசாமும் மற்றவர்களும் பார்த்தபோது டெங் அதிக தூரம் சென்றுவிடவில்லை. பாதையில் பார்வையைப் பதித்தவண்ணம், தான் எங்கே போய்க்கொண்டிருக்கிருேம் என்பதையே அறியா தவன் போன்று டெங் மெதுவாக நடந்துகெண்டிருந் தான். அவனுக்குப் பத்தடி தூரத்துக்கு உள்ளாகவே தான் அந்த மூவரும் இருந்தார்கள். டெங்பிங் அவர் களைக் கண்டதும் பீதியடைந்து திடுதிப்பென்று பின் ளுேக்கி வேகமாகத் திரும்பி, ஒடினன்.