உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

899 உட்கார ஆவலோடு போராடிக்கொண்டிருப்பதை பும் அவர்கள் கண்டார்கள். 'அங்கேயே இருங்கள். நாங்கள் கீழே வரு கிருேம்” என்று கத்தினுள் ஈஸு. வயதான டுவான் சகதியால் மூடப்பட்டு, பித்துப் பிடித்த நிலையில் இருந்தான். ஸ்ப்ரெளட் நாங்கள் கீழே இறங்கி வந்துகொண்டிருக்கிருேம்” என்று அவன் சத்தமிட்டான். அவன் ஓட விரும்பினன். அவனை ஈஸ் தடுத்தாள். 'ஷெக்டின், விரையுங்கள்!” என்று ஃபானிடம் சொன்னன் அவன். வழிக்ாட்டி முன்னமேயே முன் ளுேக்கி ஓடிக்கொண்டிருந்தான். ஸ்வாட் அங்கே படுத்துக்கொண்டிருந்தாள். அவள் மண்டையில் அடிப்பட்டு காயம் ஏற்பட் டிருந்தது. முகத்தில் ரத்தம் பீறிட்டுக்கொண் டிருந்தது. விழுந்ததன் காரணமாக அவள் அதிர்ச்சி யடைந்திருந்தாள். பையனுக்கு ஒரு கீறல்கூட ஏற்படவில்லை. அவர்கள் முதலில் பையனை உலர்ந்த தரைக்குக் கொண்டு சென்றனர்; பிறகு, ஃபானும் இரண்டு காவலர்களும் அந்த அம்மணியை மேலே சுமந்து சென்று ரஸ்தா ஓரத்தில் மெதுவாகக் கிடத்தினர்கள். ஈஸ் அவள் நாடியைப் பரிசோதித்தாள். அது வெகு வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது. ஸ்வாட் டின் கண் இமைகளைத் திறந்தாள்; அவள் கன்னத்தில் சில தடவைகள் மென்மையாகத் தட்டினுள். பிறகு "ஸ்வாட் ஸ்வாட்!” என்று கூப்பிட்டாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/399&oldid=752986" இலிருந்து மீள்விக்கப்பட்டது