உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422


'என்ன காரணத்துக் கென்று தெரியாமல் இருந்தபோதிலும், உனக்கு நான் மனப்பூர்வமாக என் நன்றியைச் செலுத்த வேண்டுமென்று பணிக்கப் பட்டுள்ளேன்-அது ஏதோ ஈஸ்வின் சம்பந்தப் பட்டதாக இருக்க வேண்டும். என்னுடைய மன முவந்த நன்றியை ஏற்றுக் கொள்வாயா?" லெய்வா அவனை நோக்கி ஒரு பார்வையை வீசி விட்டு, வேறு பக்கம் திரும்பி கேலியாக நகைத்தாள். "அது ஒன்றுமில்லை. உண்மையிலேயே ஒன்று மில்லை!........” 'அது என்ன விஷயம்?’ என்று அவன் ஃபானைக் கேட்டான். ஃபான் அவனைச் சிறிது தூரம் தள்ளி அழைத் துச்சென்று, முந்திய நாள் இரவு என்ன நடந்ததென் பதை விளக்கினன். தான் அங்கிருப்பது ஃபானுக்கு சங்கடமாக இருக்குமென்று எண்ணிய லெய்வா அங்கிருந்து நடந்து டுவான் குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாள். "அதிகாரி ஏன் ஈஸ் வைத் தேர்ந்தெடுத்தான்?" “ஏனென்ருல், லெய்வா என்னுடன் இருப்பதை அவன் பார்த்தான். எது எப்படி இருப்பினும் அது முடிந்துபோன விஷயம்.” அவர்கள் எரிதழல் மூட்டத்தைச் சுற்றிக் குழுமி யிருந்த கூட்டத்தை நோக்கித் திரும்பி நடந்தார்கள். சைசாம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். "நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நாம் கோல நட்டிலிருந்து கீழே இறங்குவோம். ஆனல் இன்றிரவு நமக்கு ஒரு சோதனையான இரவாகும். நாம் எதிர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/422&oldid=1275072" இலிருந்து மீள்விக்கப்பட்டது