உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423


புறத்திலுள்ள மலையில் ஏறி விடிவதற்குள் பாதுகாப் பான மறைவிடத்தை அடைந்துவிட வேண்டும். நான் உங்களையெல்லாம் அதற்குத் தக்கபடி தயா ராக இருக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வி டம் இங்கிருந்து நேராக ஐந்து மைல்கள்தான் என் முலும் நாம் அங்கு போய்ச் சேருவதற்குள் இரவில் பெரும்பகுதி கழிந்துவிடும்." "நாம் எப்பொழுது புறப்பட வேண்டும்?” என்று விசாரித்தான் ஃபான். 'சமவெளிப் பிரதேசங்களில் இருள் கப்பிய பிறகே நாம் பத்திரமாக நடந்து செல்ல இயலும். எதிரேயுள்ள மலையில் இருக்கும் ஒரு கிராமத்தை அடைய கொஞ்சம் சிரமப்பட்டு ஏற வேண்டியதிருக் கும். அங்கே நாம் சிறுபொழுது தங்குவோம். மலே யுச்சிக்கு நடு இரவுக்குப்பின் சென்ருல், ஓரளவு பத்திரமாக இருக்கும்.” 'அக்கிராமத்தில் எல்லைகாவல் ரோந்துப்படை வீரர்கள் இருப்பார்களா?” - “அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை; அந்த மூன்று பேர்களும் நம்மோடு வருகிருர்கள். அதுவும் நல்லதற்குத்தான் என்றும் நான் நினைத் தேன். அவர்கள் மிகவும் பலசாலிகளாகத் தென். படுகிருர்கள். நிலைமை திடீரென மாறலாம். அதைப் பற்றிய முழு விவரங்களையும் அவன் உங்களுக்குச் சொல்லுவான்’ என ஜேம்ஸைச் காட்டினன் சைசாம். ஈஸா முன்னல் சென்று பாறையின்மேல் உட் கார்ந்து நெருப்பை பார்த்த வண்ணம் ஏதேர் சிந்தனை செய்து கொண்டிருந்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/423&oldid=1275073" இலிருந்து மீள்விக்கப்பட்டது