469
அவன் டென்ஸ்ானையும் காவோவியையும் அழைத்தான். இருவரும் நதியைக் கடந்து தப்பிக்க முயன்றவர்கள். காவோவி ஒரு தடவையும், டென் ஸ்ான் மூன்று தடவையும் முயன்று காவற்படையால் பிடிபட்டுத் திருப்பியனுப்பப்பட்டவர்கள்.
டென்ஸான் ஒல்லியாக இருப்பான். எப்பொழு தும் லேசான புன்சிரிப்பு அவன் உதடுகளில் தவழும். காவோவி நீண்ட கால்களும், வலுவான உடற்கட் டும் உள்ளவன். அவனைப் புரிந்துகொள்வது கடினம். அவன் விஷயங்களை மனத்திலே கிரகித்துக்கொண்டு யாரும் அறியவொண்ணு வண்ணம் தீவிரமாக வேலை செய்யக்கூடிய திடச்சித்தமும், கபடமும் நிறைந்த வன். தேர்ந்த ஒரு வீரனின் அமைதியான முகமும் கொண்டிருந்தான்.
“இங்கே பாருங்கள்! பிடிங்கிக்கொண்டு வந்த அந்த காவற்படையினரின் உடைகளை அணிந்து கொள்ளுங்கள். துப்பாக்கிகளை உங்கள் தோள்கள்மீது தொங்கவிட்டுக் கொள்ளுங்கள். நான் உங்களைப் பார்க்கிறேன்!”
அசாய் பார்த்துக்கொண்டிருக்க கணத்திற்குள் டென்னும் காவோவும் காவற்படையினரின் உடுப் புக்களையும், துணிக்குல்லாய்களையும் அணிந்து நின் றனர்.
'இப்போது அவர்கள் எப்படித் தோன்றுகிருர் கள்?' என்று சூபாதாவிடம் அபிப்பிராயம் கேட் டான் ஹஅவாங்,
"எல்லாம் சரியாக இருக்கிறது” என்று கூறி விட்டு காவோவின் இடைவாரைத் தட்டிக்காட்டி
30