489
"ஏதாவது செய்ய வேண்டும்; ஆமாம் ஏதாவது செய்தாக வேண்டும்!” ---
உள்ளங்கைகளில் முகத்தைத் தாங்கியபடி குப்பு றப் படுத்துக்கொண்டிருந்த ஒருவன் "நான் மீன் வற்றல் தயாரித்து விற்பேன். எனக்கு அதில் மிகுந்த பழக்கம் உண்டு. சுதந்திர நகரில் அவைகளை தயா ரிக்க நிரம்ப எண்ணெய் கிடைக்கும்” என்ருன்
நீண்ட மீசையுடன் மூக்குக் கண்ணுடி அணிந்: திருந்த ஒல்லியான ஒர் இளைஞன் தன் தலையைத் துரக்கி “நான் ஆரஞ்சுப்பழங்கள் விற்பேன்! அல்லது பாத அணிகளுக்கு மெருகு போடுவேன். அத்துடன் இரவுப் பள்ளிக்கும் செல்ல முடியுமே!’
"ஒருவன் என்ன செய்கிருன் என்பது முக்கிய மன்று, விஷயம் என்னவென்ருல் ஒருவன் வயதான பின் தன் வயதிற்குரிய காரியத்தை அவன் செய்யும் படி விட்டுவிட வேண்டும். தான் செய்ய வேண்டி, யதை தானே தீர்மானித்துக் கொள்ளவும் அவனை அனுமதிக்க வேண்டும்!...”
"இந்தத் தத்துவங்களை எல்லாம் நீ எப்போது எங்கே படித்தாய்? நீ அந்த வகுப்பு நடந்தபோது இல்லையே?’
'ஆம்! நான் இருக்கவில்லை உண்மைதான்!” "ஏன் நீங்கள் கட்சியில் சேரவில்லையா?” "நான் பள்ளியில் கடைசி வருஷம் படித்தபோது, கட்சியில் சேரவேண்டுமென்று எண்ணினேன். என்னைத் தொலைவுக்கு அனுப்பப்படாத அளவிற்கு கட்சி எனக்குச் சில சலுகைகளையும் தொடர்புகளை யும் அளித்தது. ஆனல், சுறுசுறுப்பான அங்கத்தி