பக்கம்:இலட்சிய பூமி.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526


"அப்படி இருந்தால் நல்லதுதான்!” என்று கூறி ஜேம்ஸ் இருட்டில் கையை அசைத்தான். ஃபானும் லெய்வாவும் அவனோடு வந்து சேர்ந்து கொண்டார்கள். ஈஸு நடக்க முடியாத அளவுக்குக் கலக்க மடைந்திருந்தாள்.

“இதுவரை!....உங்களது உதவிக்கு நன்றி!”

ஹுவாங் கொஞ்ச தூரம் சென்றான். பிறகு ஜேம்ஸின் கைக் கடிகாரத்தைத் திருப்பிக் கொடுக்க திரும்பி வந்தான்.

"இதோ இருக்கிறது. நான் மறந்து போனேன்!” என்றான் அவன்.

"பரவாயில்லை. என்னுடைய ஞாபகமாக அதை வைத்துக் கொள்ளுங்கள்.”

"கூர்க்காக்களின் மீது ஒரு கண் வைத்து ஜாக்கிரதையாக இருங்கள். அவர்களில் சிலரோடு நீங்கள் எதிர்த்துச் சண்டையிட நேரிடலாம்.”

"ஆகட்டும்.”

“என்னிடம் ஒரு நல்ல கைக்குட்டை இருக்கிறது. நீங்கள் சட்டையைக் கழற்றுங்கள். புண்ணுக்குக் கட்டுப் போடுகிறேன்” என்று ஜேம்ஸிடம் சொன்னாள் ஈஸு.

ஜேம்ஸ் புன்னகையோடு அவள் கேட்டுக் கொண்டபடியே செய்தான்; அவனுடைய காயத்துக்குச் சிகிச்சை செய்ய ஆயத்தமானாள் ஈஸு.

சிறிது நேரத்துக்குப் பின். ஃபான் அழைத்தான்;

*அசாய்! நாம் புறப்பட்டுச் செல்வோம். வைகறைக்கு முன்னால், நாம் ஒரு கிராமத்தைச் சென்று அடைய வேண்டும்!" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/525&oldid=944997" இலிருந்து மீள்விக்கப்பட்டது