உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


பற்றி அவன் கேள்விப்பட்டிருப்பான்; அநேகமாக என்னை எதிர்பார்த்துக்கொண்டும் இருப்பான்!...” 'அப்படியென்ருல், ஈஸ்தெரைக் கண்டு பேசு கிறேன். அவளுடைய தந்தை மூலமாக இச்செய்தி யைச் சேர்ப்பிக்கும்படி அவளிடம் சொல்லு கிறேன்." "எப்போது, எப்படிச் சந்திப்பது என்பதற்கான பதிலையும் அந்த நபரிடமிருந்து பெற வேண்டும்!” மதப்பிரசார சபை இல்லத்தையும் மருத்துவ சாலையையும் இணைத்து, படரும் கொடியால் மூடப் பட்டிருந்த குட்டையான சுவரின் வாசலை கடந்து சென்ருள் ஸிஸ்டர் ஆங்கெலிகா. ஜேம்ஸ் அவளேயே பார்த்துக் கொண்டிருந் தான். அவள் திரும்பி மெல்லிய குரலில் சொன்னுள்: 'விழிப்புடன் இரு உன் நிலையில் நான் இருந்தால் தற்போது வெளியேறவே மாட்டேன்!" "மெய்தான்; எனக்குப் புரிகிறது. அவன் கையை ஆட்டி நிதானமாக அவளுக்கு விடை கொடுத்தனுப்பினன்; பிறகு பாய்ந்தோடிச் சென்று, தொய்ந்து கிடந்த ஆலமரக் கிளையொன் றைத் தழுவிச் சில விடிைகள்வரை ஊஞ்சலாடினன்; அப்புறம் மீண்டும் தரைக்குத் தாவினன். அவன் உள்ளே நுழைந்தான்; மூக்குக்கண்ணுடி அணிந்து கொண்டான்; வெளியே புறப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/62&oldid=1274835" இலிருந்து மீள்விக்கப்பட்டது