உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6] அளவு இருந்தது; நகரத்தின் குறுக்கே கடந்து சென்ருல், பெரும்பாலும் எந்த ஒரு வீதியும் அவனைக் கரைகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுமென் பதை அறிந்திருந்தான். கதவுகளின் வெளிப்புறத்தில் ஒர் அடி மூங்கில் கழிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த தட்டிதிரைகளின் பின் பக்கத்திலிருந்து ஐனங்கள் தன்னை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கண்டு கொண்டான். புதிய தெருக்களில் நடைபாதைகள் இருந்தன: பெரும்பாலான பழைய வீடுகளில் கதவு களுக்கு முன்னே படிக்கட்டுகள் இருந்தன; அவை வெள்ளம் வரும் காலத்தில் பொங்கிப் புடைத் தோடும் ஆறுகளால் சேதம் ஏற்படாமல் காப்பளித் தன. ஈஸா பிறந்து, வளர்ந்து, வசித்த அந்நகரத்தை நன்கு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென்னும் தீவிரமான ஆசை அவனுள் எழுந்தது. ஆற்றின் கரை நெடுகிலும் மரங்களின் இதமான நிழல் கவிந்து கிடந்த ஓர் அமைதி பூத்த இடத்துக்கு வந்தான்; சைப்ரஸ் எனப்படும் ஊசி இலை மரத்தின் பழைய அடிப் பகுதியில் சாய்ந்துகொண்டு ஒரு சிகரெட்டை எடுத்தான் ஜேம்ஸ். - அவன் தன்னைப் பற்றி மிகவும் ஆச்சரியப் பட்டான். அவன் என்ன செய்துகொண்டிருந்தான்? நகரத்தைவிட்டு கஸூவோடு எப்படி வெளியேறப் போகிருன்? அவன் வழிகாட்டியான ஃபானைச் சந்திக் கும்வரை அவனுக்கு ஒன்றும் புரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/67&oldid=753145" இலிருந்து மீள்விக்கப்பட்டது