ግ4 தலைமயிரின் சுகந்தத்தை அவன் அனுபவித்தான்; அவளுடைய சிறிய உடலை தன் உடம்போடு இறுக அனைத்துக்கொண்டன அவனது கரங்கள். அப்போது தனக்கே உரித்தான ஒரு பெண்ணைக் கைப்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவளை அவ்வாறு பற்றியிருந் ததால் அவன் புனர்ஜன்மம் எடுத்து மீண்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் அவன் உணர லானன். அவனுடைய கைவிரல்கள் வழக்கம் போலவே தன் முதுகின்மீது விளையாடிக்கொண் டிருந்ததை அவள் உணர்ந்தாள். தன் முகத்துக்கு மேலே இருக்கும் அவன் முகத்தை அருகில் வைத்துப் பார்க்க எண்ணி அவள் தன் தலையை உயர்த்திய போது, இநட்டில் அவள் விழிகள் ஒளி வீசியதை அவன் பார்த்தான். "என்னுடன் வாருங்கள்” என்று அவள் மெல்லிய தொனியில் சொன்னுள். பிறகு “ஃபான் போனதும் நான் உங்களைச் சந்திக்கிறேன். இங்கு நம்மை யாரும் பார்க்க வேண்டாம்” என்ருள். முன்போலவே அவள் பேச்சு உணர்ச்சி மிகுந்திருந்தது. அவனைக் கைபிடித்து அழைத்துப் போனள் அவள். அவன் சமாளித்துக்கொண்டான். பட்டை உதிர்ந்து, வெடிப்பு. கண்டிருந்த சுண்ணும்புப் பூச்சுடன் கூடிய ஒடு வேய்ந்த தாழ்வாரத்தையும் சுவர்களையும் அவன் கண்டான். அவள் ஒரு கதவைத் திறந்தாள். இரண்டு சிறிய, உயர்ந்த ஜன்னல்களிலிருந்து வந்த வெளிச்சம் நாற்பது வயசுள்ள தாடியுடன் கூடிய ஒரு மனிதன்
பக்கம்:இலட்சிய பூமி.pdf/74
தோற்றம்