உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


யாகப் பிரயாணம் செய்தாக வேண்டும்; குடியானவ பெண் மாதிரி நீங்கள் உடுத்துக்கொள்ள வேண்டும். குடியிருப்புச் சீட்டுக்களை நான் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன். கதகதப்பான சில ஆடை அணிகளும் ஒருசில ப்ளாஸ்டிக் பைகளும் உபயோகமாக இருக்கும். குடியானவப் பெண்ணுக்குரிய சாமான் களுக்கு மேல் அதிகப்படியாக மூட்டை முடிச்சு வேண்டாம். ஒரு அகலமான கச்சையை இடுப்பு வரைத் தயார் செய்து, அதை ஒட்டியாணம்போல அணிந்துகொள்ளுங்கள். அதில், யாரும் கண்டு கொள்ள முடியாத வகையில், எவ்வளவு துரக்கிச் செல்ல முடியுமோ அவ்வளவு வறுத்த அரிசி போட்டு வைத்துக்கொள்ளுங்கள். மிஸ்டர் ஜேம்ஸும் கொஞ் சம் எடுத்துச் செல்ல நேரிடும். அவ்வளவுதான்!” ஜேம்ஸ் பணம் வைத்திருந்த தோல்பையை எடுத்தான்; ஈஸுவின் செவிகளில் ஏதோ முணு முணுத்தான். ஈஸ் முகத்தைச் சுளித்து அவனைத் தடுத்தாள். அந்த மனிதனே ஜேம்ஸ் மனக்குழப்பம் அடையும்படி செய்யக்கூடாது. அவளுடைய தகப்ப ஞர் அந்த ஆளிடம் கட்டணப் பணத்தைப்பற்றி மறைமுகமாக நிச்சயம் கேட்பார். ஃபான் புறப்பட எழுந்தான். 'எனக்குத் தகவல் வந்ததும் உங்களுக்குச் சேதி அனுப்புகிறேன்." அவனுடன் கை குலுக்குவதற்கு ஒரு தப்படி முன்னே எடுத்து வைத்தான் ஜேம்ஸ். - 'நல்லது. உங்களை நான் மறுபடியும் பார்க்க வாய்க்குமா? இங்கே, ஒருவேளை நாளைக்கே சந்திக்க முடியுமா?" என்று வினவினன் ஜேம்ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/86&oldid=1274850" இலிருந்து மீள்விக்கப்பட்டது