உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


கேட்க விரும்புகிறேன். கவனமாக அதைப் பரிசீலிப் பீர்களா? அது எனக்கு ரொம்பவும் முக்கியம்!” "நிச்சயமாக நீ கே ட் ப ைத ப் பரிசீலனை செய்வேன்’ அவன் அவ்வாறே செய்வான் என்பதற்குரிய நம்பிக்கையின் அடையாளமாக அவன் கையை அவள் லேசாகத் தட்டினுள். 'நாம் திருமணம் புரிந்துகொள்ளப்போகிருேம். நம்முடன் என் தந்தையையும் அழைத்துச் செல்ல முடியுமா? அவருக்கு வயது ஐம்பத்தொன்பது ஆகி விட்டது. உடல் நலமும் சீர்கெட்டுவிட்டது. எங்களை நீங்கள் அறிவீர்கள். ஒரு சீனப் புதல்வி தன் னுடைய வயது சென்ற பெற்ருேர்களின் சந்தோஷத் தைப் பற்றி மட்டிலும்தான் சிந்திக்க முடியும். என் தாய் இறந்துவிட்டாள். அவர் நாளெல்லாம் தனியே இருக்க நேரிடும். அவர் என்னுடன்-நம் முடன் வருவதை நான் பெரிதும் விரும்புகிறேன்.” “எனக்குப் புரிகிறது. நம்முடன் தங்கியிருப் பதற்கு எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. எங்களுக்கு ஒரு பெரிய வீடும் தோட்டமும் இருக் கின்றன. நமக்குத் தேவைப்படும் வேலையாட்களும் நிறைய உள்ளனர். நம் பயணத்தைப்பற்றித்தான் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். உன் தந்தைக்கு நீந்தத் தெரியுமா? நாம் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். உனக்கு நீந்தத் தெரியும் என்பதை நான் அறிவேன்." "அவருக்கு நீந்தத் தெரியாது. ஆனால், அவரது உடல்நலக் குறைவுதான் எனக்குக் கவலையாக இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/98&oldid=1274860" இலிருந்து மீள்விக்கப்பட்டது