பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ★ இல்லம்தோறும் இதயங்கள்


நின்னால், நீயா உதவப் போற? மேயுற மாட்ட கெடுக்கு மாம் சாயுற மாடு!”

‘சங்கதி எனக்குல்லா தெரியும்’ என்று ராமபத்திரன் சொன்னதை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வெளியே இருந்த மணிமேகலைகூட புரிந்துகொள்ள வில்லை. ஆகையால் கம்பவுண்டர் மணியும், அவரைப் புரிந்துகொள்ளாமலே சொன்னான்.

“குழந்தைங்க மனசுல தாங்கள் நோயாளிங்க என்கிற பீதியைக் கிளப்பக் கூடாதுன்னு பார்க்கிறேன். வேணு முன்னால் எங்க டாக்டர் குமரன்கிட்ட கேளுங்க. அவரும் இதைத்தான் சொல்வாரு. யாருக்கும் எதுவும் கிடையாது சாமீ. மிஸ்ஸஸ் ஜெயராஜுக்குகூட இப்போ ஒண்ணும் கிடையாது. டாக்டர் குமரன் கொடுத்த மருந்துல சரியாப் போயிட்டு.”

“இந்தா பாருப்பா! நீ எந்த டாக்டர வேணுமுன்னாலும் பேசு. ஆனால் டாக்டர் குமரனைப் பத்தி மட்டும் பேசாத பத்தி எரியுது! டாக்டரய்யா அவன்? ரெண்டு மாத்திரையைக் கொடுத்து நோயை அடக்குவானே தவிர, அப்புறப்படுத்த மாட்டான். தன்ன எல்லாரும் கைராசிக்காரன்னு சொல்லணுங்கறதுக்காக, நோய் சுகமாகும் முன்னாலேயே சுகமாயிட்டுன்னு சொல்றவன். சுகமில்லாத டாக்டர். இனிமேல் அவன் பேச்சை பேசாத சரி! எல்லாரும் ரெடியாகுங்க. திருவள்ளுர்ல நர்ஸிங்ஹோம் வச்சிருக்கிற டாக்டர் மாதவன்கிட்ட போகலாம். நல்ல ராசிக்கார மனுஷன். மருந்து கொடுக்கு முன்னாலயே நோய் சுகமாயிடும். நோய சொல்லிக்கிட்டு இருக்கும் போதே மருந்த எழுதுவாரு அவ்வளவு சீக்கிரமாய் கண்டு பிடிக்கவரு” மணி இறுதியாக இடைமறித்தான்.

“நீங்க செக்கப் பண்ணப் போறதே தப்பு. அதுவும் மாதவன்கிட்ட போறதவிட, மரணத்துக்கிட்ட போவலாம்.