பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 ★ இல்லம்தோறும் இதயங்கள்


என்னை உயிரோட வச்சிருக்காளேன்னு சந்தோஷப்பட்டேன். இப்போதான் அவளோட மாய்மாலம் எனக்குப் புரியுது. இவ்வளத்தையும் நான் கண்ணால பார்க்கணு முன்னு விட்டு வச்சிருக்காள். விடும்வே. என்னைத் தொட் டால், ஒம்ம கையில கரையான் அரிக்கும். விடும்வே!”

இதுவரைக்கோ அல்லது இப்போதைக்கோ, கரையான் அரிக்காத கைகொண்ட ராமபத்திரன் அவரை விட்டு விட்டார். மற்றவர்களுக்கு அவரைக் கூப்பிடத் தைரியமில்லை. ஜெயராஜ் டிரைவர் இருக்கையில் அமர்ந்தான். திடீரென்று பாமா, “இந்திராவக் காணல! இந்திராவக் காணல!” என்றாள்.

சங்கரன் காரிலிருந்து இறங்கி இந்திராவைத் தேடி னான். பின்கதவைத் தட்டினான். கதவு உடைபடும் அளவுக்குத் தட்டப்பட்டதால், முருங்கை மரத்தில் சாய்ந்து கொண்டிருந்த இந்திரா கதவைத் திறந்தாள்.

“அம்மாவை ஸ்பெஷலா கூப்புடனுமோ?” என்று சங்கரன் ஸ்பெஷலாய் கத்தினான்.

“நான் வரல. எனக்கும் வரல. நீங்க போங்க.”

“ஏய்!”

“போண்ணா... அண்ணிக்கு நான் துணையாய் இருக்கணும்!”

“ஏய் !”

“மாமா பேச்ச கேட்டு நீதான் ஆடுற. நான் எதுக்காவ ஆடணும்? நான் அண்ணிகிட்ட இருப்பேன். அண்ணி கிட்டேயே இருப்பேன்!”

அவ்வளவுதான்.

சங்கரன் அவள் தலைமுடியைப் பிடித்து கைக்குள் பந்துமாதிரி சுருட்டி வைத்துக்கொண்டு, தோளிலும்