பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 103


நர்ஸிங்ஹோம்ல கழிச்சிக்கிட்டு இருந்தான். இதுல ஏகப்பட்ட காசு சேர்த்தான். இப்போ, அபார்ஷன லீகலைஸ் பண்ணிட்டதால பிழப்புக்கு என்னடான்னு பார்த்தான். அவனுக்கும் கிடைக்குது. ஒரு முள்ளு குத்திட்டால் போதும். ‘அய்யய்யோ! ஸெப்டிக்காயிட்டு. பெட்ல நாலு நாளைக்கு இருக்கணுமுன்னு’ சொல்லி, ஒட்டை ரூம்ல போட்டு, தினம் பதினைஞ்சு ரூபா பிடுங்கிடுவான். நர்ஸிங் ஹோம நடத்துறதே வாடகைக்கு விடத்தான். இந்த லட்சணத்துல, இவன் ஆஸ்பத்திரில வேற ஹானரரி சர்ஜன். ஆஸ்பத்திரி மருந்த எடுத்து நர்ஸிங் ஹோம்ல போடுவான். ஆஸ்ப்ரோ மாத்திரையை, அடை யாளம் தெரியாம துளாக்கி, பொட்டலம் போட்டு ஒவ்வொரு பொட்டலத்தையும் ஒரு ரூபாய்க்கு விக்கிறவன். முள்ளு குத்துன இடத்த மூனுநாள் ‘அப்ஸர்வ்’ பண்ணணுமுன்னு சொல்றவன்.”

“அவ்வளவு மோசமானவரா?”

“வேணுமுன்னா பாருங்களேன்! ஒங்க ஆட்கள எவ்வளவு தூரம் காப்ராபடுத்தப் போறான்னு... ‘மாதம் ஒரு தடவ, கண்டிப்பா வரணு’முன்னு சொல்லப் போறான் பாருங்க. இந்த டாக்டருக்கு, காச பிடுங்குறதுக்கே ஒரு டாக்டரேட் கொடுக்கலாம்.”

மணிமேகலை உதட்டைக் கடித்துக்கொண்டே எதையோ யோசித்தாள். மணி, கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டான்.

“சாப்பிட்டிங்களா?”

பதிலில்லை.

“கவலப்படாதிங்க.”

“....................”

“போகட்டுமா ?”