பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 ★ இல்லம்தோறும் இதயங்கள்


“என்ன பாமா அப்படிச் சொல்லிப்பிட்டே? பேய்க்கு வாழ்க்கப்பட்டால் புளிய மரத்துல ஏறி ஆகணும். நல்ல வேள இப்போ இல்ல. இருந்தாலும் டாக்டர் வைட்டமின் மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்கார் பாரேன். பணத்த பார்த்தால் முடியுமா?”

“நாங்க பணத்த பாக்கல, அலைச்சலத்தான் பாக்கோம்.”

“என்ன செய்யுறது? ஒரு ஆளுக்கு ஒண்ணு வந்துட்டா, ஒன்பது பேருக்கு பார்க்க வேண்டியதிருக்கு காலத்தோட கோளாறு.”

எல்லோரும், அந்த ‘ஒரு ஆளையே’ பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்கள். வசந்தியும் வந்திருந் தாள். அவளும் தன் பாட்டுக்கு “மாமாவயும் காட்டணும்; அவரு இருக்கிறதைப் பார்த்தால், எனக்குச் சந்தேகமாய் இருக்கு” என்றாள் அந்த சந்தேகத்திற்குரியவள்.

கணவனின் தோளில் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் மணிமேகலை. அவன் ‘அம்மா. அம்மா...’ என்று சொல்லி, அவள் கழுத்தைச் சுற்றி, கைகளைக் கோர்த்துக்கொண்டு, சங்கிலிப் பிடியை இறுக்கினான். நசுக்கப் போகும்போது, கட்டிலோடு கட்டிலாக ஒட்டிக் கொள்ளுமே மூட்டைப் பூச்சி—தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பந்துமாதிரி சுருட்டிக் கொள்ளுமே முள்ளெலி—அந்த மூட்டைப் பூச்சிபோல், முள்ளெலி போல் தன்னைச் சுருட்டி அம்மாவைப் பிடித்துக் கொண்டான். ‘இனிமேல் என்னை விடாதம்மா... நான் ஒனக்குப் பிடிக்கலியா’ என்று சொல்வது போலிருந்தது அந்தப் பிடி. ‘நான் உன்னை மட்டுந்தான் பார்ப்பேன்’ என்று சொல்லியது அப்பார்வை.

மணிமேகலை, ஒட்டிய குழந்தையுடன் ஒட்டிக் கொண்டு படுக்கை அறைக்கு வந்தாள். யாரும் அவளிடம்