பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



112 ★ இல்லம்தோறும் இதயங்கள்


யிழுக்கும் நொண்டி அழுகை, குழந்தையும், அம்மாவுக்குப் போட்டியாக அழுகிறான்.

“அம்மாங்க... அம்மாங்க?” அம்மா எங்கே என்ற வார்த்தையை, குழந்தை கூட்டிச் சொன்னான் கழிக்கப்பட்ட அன்னையோ ஆவலுடன் குழந்தையுடன் கூட முடியாமல் தவித்தாள். கைகளை வயிற்றில் வைத்து அழுத்திக்கொண்டாள். குவிந்த உதடுகளை உள்நோக்கி விட்டுக்கொண்டாள்.

மறுநாள் காலையில் கணவனுக்குத் தெரியும்படியாக கையுறைகளைப் போட்டுக் கொண்டாள். அவள் கணவன் உட்பட அனைவருமே மானாதிமான மனிதாபிமானிகள். பையனை விட்டார்கள. அவன் பாய்ந்து வந்து, அவள் கால்களைக் கட்டிக்கொண்டான். அவள் அவனை வாரியெடுத்து வாய் முத்தம் கொடுக்கப் போனாள். ‘எதிர்வீட்டு’ ஜெயராஜ் முறைத்துப் பார்த்தான். “முத்தம் கொடுக்கல... நான் கொடுக்கல...” என்றாள் கணவனைப் பார்த்து.

பொழுது போய்க்கொண்டே இருந்தது.

இப்போதெல்லாம் ரமாவுக்கு அவள் பாடஞ் சொல்லிக் கொடுப்பதில்லை. அவளே ‘பாடம்’ படிக்கிறாளே. பிள்ளைகள் அவள் கண்முன்னாலயே “ஏய், இங்க புள்ளியிருக்கு. ஒனக்கும் இருக்கு” என்றார்கள். குழந்தையோ இரவில் அம்மாவைப் பார்க்க முடியாமல் போனதற்காக, அழுகையை நிறுத்தவில்லை. அவள், வீட்டுக்குள் போய் வந்துகொண்டுதான் இருந்தாள். யாரும் அவளைத் திட்டவில்லை. தனித்தட்டைக் கொடுத்து அவளை விசேஷமாகத்தான் கவனிக்கிறார்கள். பாமாவும் பார்த்ததும் புன்னகை செய்யத்தான் செய்கிறாள். லட்சுமி மங்களகரமாகத்தான் இருக்கிறாள். வசந்தியும் வந்து கொண்டுதான்