பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



112 ★ இல்லம்தோறும் இதயங்கள்


சுகமாயிட்டு. முன்ன எப்படில்லாம் இருந்தாளோ, அப்படில்லாம் இருக்கலாமுன்னு குமரன் டாக்டர் சொன்ன பிறவும், நீங்க அவள தள்ளி வச்சா பூமி தாங்காது. மணிமேகல! பசிக்குது. சோறு கொண்டாம்மா! ஒன்னத்தான், நீ மட்டும் கொண்டு வரலன்னா இனிமே எப்பவும் சாப்புடமாட்டேன்.”

மணிமேகலை அந்த ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டவள் போல் சமையலறைக்குள் போனாள். பாத்திரங்களைக் கொண்டுவந்து சாப்பாடு போட்டாள். ரசத்திற்கு உப்பு கூடியிருக்க வேண்டும். ஏனெனில் அவள் கண்ணீர் அதில்தான் விழுந்தது.

அனைவரும் திகைத்து நின்றார்கள். கிழவர் சாப்பிட்டு முடித்ததும் மணிமேகலை “ஒங்களத்தான், ஒரு நிமிஷம் இப்படி வாரிங்களா” என்றாள்.

ஜெயராஜ் வந்தான். “இந்த நிலமயில நான் இங்க இருக்கது நல்லது இல்லன்னு நினைக்கேன். எனக்கும், ஒரு சேஞ்ஜ் வேணும். நாளைக்கு ஊருக்குப் போயிட்டு ஒரு மாசம் இருந்துட்டு வரலாமுன்னு நினைக்கேன்.”

ஜெயராஜ் பேசவில்லை. மனைவி போவதை பொறுக்க முடியுமா? ஆகையினால் தலையாட்டினான்.

“நாளைக்கே புறப்பட்டுப் போறேன். ஆனால் என் பையன் என்கிட்ட தந்திடனும். சரிதானே?”

இதுக்கும் தலையாட்டினான் ஜெயராஜ். பிறகு அவளைப் பாராமலே பேசினான்.

“காரு, ஒன்னால அண்ணன் கிட்ட போயிட்டு. மோட்டார் பைக் நாளைக்கு ஸர்வீஸ் போகுது.”