பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 117


"ஊர்ல இருந்து வந்த ஒரு மாதத்துக்குள்ள அவனுக்கு நீ எழுதின லட்டருங்கள வாங்கணும். அவ்வளவுதானே? நானே கொண்டு வரேன். நீயே கிழிச்சுடலாம். சரி, போம்மா !”

"நானும் அரக்கோணம் ஸ்டேஷன் வரைக்கும் வாரேன் !”

"வேண்டாம்மா. ஸ்டேஷனுக்கு வருவே!அப்புறம்

ரயிலுக்குள்ள வருவ! பிறகு ஒடுற ரயிலுல இருந்து குதிக்கப் பார்ப்பே வேண்டாம். போம்மா."

பாமா துணுக்குற்றவள்போல் சிறிது நின்றாள். மணிமேகலை அவளோடு நிற்காமல் தன் பாட்டுக்கு நடந்தாள். திடீரென்று ஒரு கார் தன்னருகே வந்து நின்றது. ஜெயராஜ், "வண்டில ஏறு. அரக்கோணம் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வந்து விடுறேன்..” என்றான்.

மணிமேகலை அவனையே பார்த்தாள். எதையோ சொல்லத் துடித்த உதடுகள், பிரியாமல் மடிந்தன. அவனை அனைத்த கைகள் ஆடின. ஒருகணம் ஒரே கணம்தான். பிறகு நிதானமாகச் சொன்னாள்.

"பெண்டாட்டி போகிற கவலையில உங்களால வண்டியை சரியா ஒட்ட முடியாது. நான் வாரேன். பிள்ளய மட்டும் நல்லா கவனிச்சுக்கங்க. அப்போ, நான் வரட்டுமா ?”

ஜெயராஜ், காரை ரிவர்ஸில் கோபமாக ஒட்டிய போது மணிமேகலை தாபமாக நடந்தாள். ஒருவேளை, கணவனிடம் அப்படிப் பேசியிருக்கக்கூடாதோ என்று கூட நினைத்தாள். ஏன் கூடாது? சென்னை வரைக்கும் வரக்கூடாதா? மோட்டார் பைக் சர்வீஸுக்கு போகுதாம். ஒருநாள் தள்ளி விடக்கூடாதா? இதுதான் அவருடைய சர்வீஸ், மொத்தம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறார். முன்ன