பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                            சு. சமுத்திரம் + 1 :

   "ஒனக்கு மூளை இருக்காடா? 'அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் பழையபடியும் வந்திருக்கு... ஒன்னை பார்க்கிறதுக்கு தவியாய் தவிக்கிறார்... துடியாய் துடிக்கிறார்'னு எழுதிட்டு... இப்போ அலட்சியமாய் பதில் சொல்றியே. நியாயமாடா? இப்படியாடா பொய் சொல்லி எழுதறது?"
  "லேசா நெஞ்சு வலிக்குன்னார். உடனே எழுதினேன். லட்டர் எழுதி முடிச்சதும், வலிக்கலன்னார். நான்தான், இருபது பைசாவுக்கு வாங்குன லட்டரை கிழிக்க மனசில்லாம அனுப்பிட்டேன்."
  "அதுக்காக இப்படியாடா எழுதறது ? ஹார்ட் அட்டாக்... தவியாய் தவிக்கிறார்... துடியாய் துடிக்கிறார்... என்னடா இதுல்லாம்? இன்னும் ஒனக்கு விளையாட்டுப் புத்தி போகல. தப்புத் தப்பா லட்டர் எழுதறது தப்புடா."
  "கொஞ்சந்தான் தப்புத்தப்பா எழுதினேன். ஆனால் அப்பா உன்னைப் பார்க்கணுமுன்னு தவியாய் தவிச்சது வாஸ்தவம். துடியாய் துடிக்கல. உன்னைப் பார்க்கணுமுன்னு துடியாய் துடிச்சது நான்தான். அப்படி லட்டர் எழுதாட்டால் நீ வருவியா என்ன? நீதான் என்னை மறந்துட்ட, எத்தனையோ விஷயங்களை சொல்லித் தந்த நீ, ஒன்னை மறக்கறதுக்கும் ஒண்ணு சொல்லிட்டுப் போ."
  மணிமேகலை தம்பியையே பார்த்தாள். முக்கோணம் போல் மடித்து வைத்திருந்த அவன் கைக்குள் அடைக்கலமாய் இருந்த தன் குழந்தையும், தம்பியும் ஒரே அச்சாக இருப்பதைக் கவனித்தாள். தம்பியின் தலை முடியை கோதிவிட்டுக் கொண்டே "அக்காமேல அவ்வளவு பாசம்! அதனாலதான் லட்டர்மேல லட்டர் போட்டும் அரக் கோணத்துக்கு வந்துட்ட பாரு” என்றாள். பொறுமைக்குப் பெயர் போகாத பாமா. "சரி சரி! எல்லாத்தையும் இறக்கி வைக்கலாம். நீங்க பேசுறதைப் பார்த்தால், நாம ஷண்டிங்