பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 ★ இல்லம்தோறும் இதயங்கள்


மணிமேகலைக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. பிள்ளையைப் பற்றிக் கேட்டிருக்க வேண்டும். தப்புத்தான். சொந்தப் பிள்ளையின் ஞாபகங்கூட இப்பத்தானே வருது:

மணிமேகலை சமையலறைப் பக்கம் போனாள். தொட்டிலில் துங்கிய அண்ணன் மகனை எடுத்து தோளில் போடப் போனாள். அண்ணிக்காரி "இப்பத்தான் துங்குறான். தூக்கத்த கெடுக்காத!” என்று சொன்னதோடு, குழந்தையையும் அவளிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி தொட்டிலில் போட்டாள். அண்ணன்காரன் சற்று அதட்டலோடு அவளை விசாரித்தான்.

"ஆமாம், ஆயிரம் கஷ்டம் வரட்டும். தொளாயிரம் நோய் இருக்கட்டும். அதுக்காவ இப்படியா 'குளுவச்சி' மாதுரி நடந்து வாரது? ஒரு கார்ல வாரது? காசு இல்லாட்டாலும், நான் குடுக்காமலா போயிடுவேன்? ஒரு லட்டர் எழுதியிருந்தா சந்திரனை அனுப்பி இருப்பேமில்லா? நீ நடந்து வந்தத பார்த்தா, நாளைக்கு தெருவுல எந்தப் பயலாவது என்னை மதிப்பானா? இப்படியா 'கூறு' கெட்டு போவணும் ? சே... சே... ஏன் இப்டி புத்திய கடன் கொடுத்த?”

மணிமேகலை கடன் கொடுத்த புத்தியை வட்டியோடு சேர்த்து வாங்கிக்கொண்டவள் போல் யோசித்தாள். தப்புத்தான். ஊர்லயே பணக்கார வீட்டுப் பெண்ணான நான் தூத்துக்குடில பிச்ச எடுத்தாவது அந்தக் காசுல டாக்ஸில வந்திருக்கணும். அண்ணன் பிச்ச எடுத்தத பெரிசா நினைக்காமல் நான் கார்ல இறங்குவதை பெருமையா நினைச்சிருப்பான். ஒரு வார்த்தை உடம்புக்கு என்னம்மா வந்துதுன்னு கேக்குறானா? உடன் பிறந்த பாசம் என்பது பெண்களுக்கு மட்டுந்தானோ? சகோதரி மனம் பித்து, சகோதரன் மனம் கல்லுன்னு கூட