பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

ந்தாவது வகுப்பிலும், உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரே குறளைப் படித்தாலும் அதை வேறு வேறு மாதிரியான கோணங்களில் பார்ப்பதுபோல மணிமேகலை இன்றைய வாழ்க்கைக் கல்லூரியில் கிடைத்த அனுபவத்தில் முன்னைய உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையை வேறுவிதமாகப் பார்க்கத் துவங்கினாள். இதனால், தந்தையைத் தவிர மற்ற எல்லாருமே-தான் உட்பட-அவளுக்கு வேறு விதமாகத் தென்பட்டார்கள்.

ரயில் பயணம் நெடுக, பெற்ற குழந்தையையும், அவனை கையோடு கொண்டுவர முடியாமல் போன கொடுமையையும் நினைத்து கலங்கி வந்தாள். ஊருக்குள் வந்தபோது, தன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது தெரியக்கூடாது என்று ஒடுங்கி வந்தாள். ஆனால் எப்போது அப்பாவை வாதம், அவர் அதனுடன் வாதிட முடியாதபடி முடக்கிவிட்டது என்பதை அறிந்தாளோ, அப்போதே தான் மிராசுதார் அருணாசலம் என்பவரின் மகள் என்பதைத் தவிர மற்றதை மறந்துவிட்டாள். கல்யாணம் ஆனதும், கணவன் இருப்பதும், கண்மகனைப் பிரிந்துவிட்டு வந்திருப்பதும், அவளுக்கு மறந்துவிட்டது.

அவளும், அவளைப் பெற்றவனையும் தவிர அவளுக்கு யாருமே அப்போதைக்கு உயிருடன் இல்லை. ஆனால் இந்தச் சந்திரன்-போன 'ரெண்டு' கண்ணில் ஒரு கண் வந்துவிட்ட திருப்தியில் இருக்க வேண்டியவன்-ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக வளர்ந்த அக்காவை, அப்போதைக்காவது நினைக்க வேண்டிய அந்த