பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 ★ இல்லம்தோறும் இதயங்கள்


உடன்பிறப்பு அல்லது தாய்க்குத் தாயாய் வளர்த்த தந்தையின் அவலத்தை, அப்போதைக்காவது தாங்க முடியாததுபோல் துடிக்க வேண்டிய அந்த செல்ல மகன், பாமாவை நினைத்து விம்முகிறான். அந்த 'புனிதக் காதலில் சிக்குண்டு அவன் பெற்ற தந்தையையும், உற்ற உடன் பிறப்பையும் ஒரேயடியாய் மறந்தவன்போல் நடந்து கொண்டான். அண்ணிக்காரி எதிர்பார்த்ததுபோல் நடந்துகொண்டாள். அண்ணன் அசல் பெருமாள் மாட்டைவிட, ஒருபடி அதிகமாகப் போய்விட்டான்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அவை நகர நகர, மணிமேகலை தன் பையனின் பக்கமாய் நகர்ந்து கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் அப்பாவின் கண்களை ஈரத் துணியால் துடைத்துவிட்டு நனைந்த வேட்டியை நீக்கி, புதுவேட்டி கட்டிவிட்டு அவரைத் தூக்கி வைத்து தன்னோடு அணைத்துக்கொண்டே, தலையணை உறையை மாற்றி, அவர் வாய் உலராமல் இருப்பதற்காக வெந்நீர்த் துளிகளை ஆறவைத்து, அவரது உதட்டோரத்தில் தடவிவிட்டு பணிவிடை செய்து வந்தாள்.

டேபிள் விசிறியைப் போட்டு கொசுக்களை விரட்டப் பார்த்தாள். ஆனால் அப்பாவுக்கு குளிரும் என்று அவளே அனுமானித்து அதை நிறுத்திவிட்டு கைவிசிறியால் கண் முன்னால் வீசிக்கொண்டிருந்தாள். கைவலிக்கும்போது, அந்தப் பக்கமாக வரும் சந்திரனிடம் கொஞ்சம் வீசுடா என்று சொல்லப் போவாள். ஆனால் அவனோ தன் கண்களை 'அரக்கோண' திசையில் வீசியவன்போல் அக்காவையும் அப்பாவையும் சிறிதுநேரம் அப்படியே பார்த்துவிட்டு, பிறகு தன் துயரம் அதைவிட மோசமானது என்று ஒப்பிட்டுப் பார்த்தவன்போல் விலகிப் போவான். படுக்கையில் கிடக்கும் தந்தை தனக்குச் செய்த நல்லதையெல்லாம் அவன் நினைத்துப் பார்க்கும்போது, அவர் பாமாவை தான் மணக்க சம்மதம் தெரிவித்ததே