பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 * இல்லம்தோறும் இதயங்கள்


பிளேஸ்ல போய்தான் இறங்க வேண்டியதிருக்கும்" எனறாள்.

  சந்திரன் எல்லாப் பொருட்களையும் எடுத்து வாசலில் வைக்க, கீழே இறங்கிய பாமா, அவற்றை ஒவ்வொன்றாக வாங்கி, கீழே வைத்தாள். அவன் கை, அப்படி வாங்குகையில் தற்செயலாக தன்மீது பட்டபோது அவள் லேசாக ஒதுங்கிக்கொண்டே வாங்கினாள்-லேசாகத்தான்.
  போர்ட்டரிடம், கொண்டு வந்தவைகளை ஏற்றிவிட்டு, மணிமேகலை, மீண்டும் தம்பியைச் சாடினாள்.
  "என்னடா... இன்னைக்காவது, காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாதா? எவ்வளவு நேரமாடா தேடுறது?"
  "நீ பஸ்ட் கிளாஸ்ல வருவேன்னு ஒவ்வொரு முதல் வகுப்புப் பெட்டியையும் பார்த்தேன். முன்னால நாலு கோச், பின்னால நாலு கோச். இந்த ரயிலை, இரண்டு தடவை அளந்தாச்சு. நீ என்னடான்னா, தேர்ட் கிளாஸ்ல வார!”
  "நானும், நீ பஸ்ட் கிளாஸ்ல வருவேன்னு நினைச்சேன். கடைசில, தேர்ட் கிளாஸ்லகூட வரல."
  "என்னக்கா நீ? இப்பகூடவா பரிட்சையை ஞாபகப்படுத்தனும்? அதுவும்.”
  "கோபப்படாதடா... இவள் மூணாவது மனுவியல்ல! நான் ஒங்கிட்ட சொன்னேன் பாரு, பாமா, அது இவதான்! இவளும் ஒனக்கு இளைச்சவள் இல்ல. நீயாவது பரிட்சை எழுதி கோட்டடிச்சே. இவள் பரிட்சையே எழுதல. அவ்வளவு பயம்."
  "பொய் சொல்லாதிங்க அண்ணி. இந்தா பாருங்க, அண்ணி சொல்றத நம்பாதிங்க. எக்ஸாம் சமயத்துல