பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 141


புகல்வாய் ! என்கிறான். அவன் தாலியை தாவென்று கேட்கும் கொடியவன் இல்லை. தாலி இருக்கே, அதைக் கட்டியவனைக் காணலியே' என்று தன் சந்தேகத்தைத்தான் கேட்கிறான். உடனே சந்திரமதி சொல்பவன் தன் கணவன் என்பதைப் புரிந்துகொண்டு, அப்படியானால், சாமீ தாங்கள். என்கிறாள். வார்த்தையை முடிக்க முடி யாமல் திண்டாடுகிறாள். எப்படி நம்ம கற்பனை? இது என்னோட கற்பனை இல்லம்மா. தஞ்சை கோவிந்தராசுன்னு ஒரு கலைஞர், மெட்ராஸ்ல வன்னிய தேனாம் பேட்டையில இருக்கார். இங்க நாடகம் போட வந்தபோது இதைச் சொன்னார். இதனால என் பங்கு இல்லன்னு நினைக்காதிய ஊர் விவகாரத்தயும் ஜாட மாடயா இடையில விட்டிருக்கேன். ஒங்க அப்பாவுக்கு தினமும் ரெண்டு ரூபாய் மாத்திர கொடுத்துக்கிட்டு வரும்போது அவரு லேசா உட்காருவாரு ஒங்க அண்ணன் காசுக்கு ஆசப்பட்டு மாத்திர கொடுக்கறதை நிறுத்திட்டாரு. பாழாப்போற பாவி, இந்த மனுஷன் இல்லாம இவரு எப்படி வந்தாரு? இருக்க வைக்கிற மாத்திரைய வாங்கப் படாதா? இவ்வளவு சொத்துல ஒரு ரெண்டு ரூபா பெரிசா ? அதனாலதான் சந்திரமதி, பிணமாப்போன மகனை வைத்து தவிக்கும்போது 'மகனே! மகனே! மரணப் படுக்கையில் பிதா கிடக்கையில் நீ அன்னவர் வேதனை யைக் குணப்படுத்த அயச்செந்துரம் கொடுக்க மாட்டாய். மருந்து கொடுக்காமலே உன்னை பிறப்பித்த வனை இறக்க விடுவாய் என்று நினைத்து இந்த நல்ல பாம்பு மருந்து கிடைக்காத இடத்தில் உன்னைக் கொத்தி கொன்றதோ? என்கிறாள். அப்புறம் தன் தந்தையை நினைத்து,

அய்யாவே அய்யாவே அழகான அய்யாவே-ஒமக்கு
மருந்துகொடுக்காமல் மாளடித்த பாவியில்ல....
பொற்காசு போமென்று உம்மை போகவைத்த பாவியல்ல
முடங்கிக் கிடந்த ஓம்மை மூலையிலே சாத்தவில்லை