பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 ★ இல்லம்தோறும் இதயங்கள்


என்கிற முறையில் கேட்கிறேன். கல்யாணமான ஒரு பெண்ணோட லட்டருங்களை வச்சிருக்கவனுக்கும், ஒரு காலிப்பயலுக்கும் வித்தியாசம் கிடையாது."

"எனக்கும் ரோஷம் உண்டு. யோசித்துப் பேசு.”

“சீ... ஒனக்கு ரோஷம் இருக்காக்கும். இதை நான் நம்பனுமாக்கும். அவள் ஒன்னை ஒரு பொருட்டாக நினைக்காமல் பெரியவங்க காட்டுனவன் நீட்டிய தாலிக்கு நிம்மதியாய் தலையை நீட்டிட்டாள். உன்கிட்ட இருந்து தப்பிச்சதையே பாக்கியமாய் நினைக்கிறாள். நீ வெட்கங் கெட்டதனமாக விரும்பாத பெண்ணோட லட்டருங்கள வச்சிக்கிட்டு பாக்கியில்லாம படிக்கிறியாக்கும். இதுல வேற ஒனக்கு ரோஷம் இருக்காக்கும்? உதறிவிட்ட பெண்ணோட லட்டருங்கள உதறாமல் இருக்கிற நீ, ஒரு ஆண் மகனாடா? நம் சங்க கால இலக்கியத்துல கைக்கிளைன்னு' ஒரு பிரிவு இருக்குது தெரியுமா? ஒன்னை மாதுரி பேடிப் பயலுவளுக்காக அப்பவே பாடி வச்சிருக்காங்க பாரு சீச்சீ!”

சந்திரன், தனக்கு ரோஷம் இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பியவன்போல ஒரே ஒரு கடிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு இதர கடிதங்களை வீசினான். மணிமேகலை வீசப்பட்டவைகளை குனிந்து எடுத்துக்கொண்டு வீசாமல் இருந்ததை அவன் கையை மடக்கிப் பிடுங்கிக்கொண்டு அவற்றைக் கிழிக்கப் போனாள். பிறகு பாமாவுக்குக் கொடுத்த வாக்கு. அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவளிடம் காட்டிவிட்டுக் கிழிக்க வேண்டும். அவள்தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை. நாமாவது நிறைவேற்றுவோம்.

தம்பிமீதே சற்று இரக்கம் ஏற்பட்டது. அவனை அனுதாபத்தோடு பார்த்துக்கொண்டே அப்பாவின் பக்கம் வந்தாள். இப்போது அந்த அனுதாபம், கடுங்கோபமாக