பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 ★ இல்லம்தோறும் இதயங்கள்


ஒன் புருஷனை, இன்னொரு பெண்ணோட சினிமா தியேட்டர்லகூட பாத்திருக்கான். மனிதர்கள் ஜாதி அடிப்படையில தனித்தனியா நிற்குற-ஒரே ஜாதியிலயும் மனுஷங்க, பணத்தின் அடிப்படையில தனித்தனியா நிக்கற இந்த சமுதாயத்துல, இந்த மாதிரி நடக்கது சகஜந்தான். இதுக்கு நீயும் ஒரு வகையில காரண்ம். எப்போ புருஷன் ஒன்னைத் தள்ளி வைக்கிறானோ, அப்பவே நீயும் அவனைத் தள்ளி வச்சிடணும். சொத்துல பங்கு கேட்டிருக்கணும். எப்போ ஒன் அண்ணன் தம்பிங்க அப்பாவ பார்க்கலியோ, நீ அப்பவே அவங்க முகத்துக்கு எதுருலயே ‘என் சொத்த பிரிச்சிக் கொடுங்கடா. எனக்கும் சொத்துல உரிம இருக்குன்னு அடிச்சிப் பேசியிருக்கணும்."

"இந்தக் காலத்துல நல்லவனா மட்டும் இருந்தால் பத்தாது, வல்லவனாயும் இருக்கணும். இப்படித்தான் இந்தப் பொண்ணு வடிவுக்கரசிக்கு, அறுபது பவுனும், இருபதாயிரம் ரூபாய் ரொக்கமும் போட்டு எவனோ ஒரு கிளார்க்குக்கு கட்டிக் கொடுத்தாங்க. அந்தப் பய அப்பா அம்மா பேச்சக் கேட்டு, தூத்துக்குடியில வீடு வாங்குற துக்கு ஒப்பாகிட்ட ரூபாய் வாங்கிட்டு வந்தால்தான் வீட்டுக்குள்ள நுழையணுமுன்னு சொன்னானாம். இந்தப் பொண்ணும் அப்பாக்கிட்ட வந்து ஒப்பாரி வைக்க, அவரும் ரூபாய கொடுத்து விடுறாரு. இப்படிப்பட்ட பயலுவகிட்ட எதுக்காவ வாழனும்? தாலிய அத்து அவன் முகத்துல வீசினா என்ன? இந்த லட்சணத்துல கல்யாண அழைப்பிதழ்ல முருகன் படத்தப் போடுறாங்க முட்டாப் பயலுவ! இவங்க முருகனுக்குப் பதிலா ரூபாய் நான யத்தல்லா அழைப்பில போடணும் : துப்புக்கெட்ட பயலுவ! துட்டுத்தான் இவங்களுக்கு முக்கியம்.”

மணிமேகலை சிந்தனையில் இருந்து விடுபட்டவாறு கேட்டாள்: