பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


மணிமேகலை அப்பாவையே பார்த்தாள். அருகே போய் அவர் கண்களையே பார்த்தாள். அந்தக் கண்களில் இப்போது நீர் முட்டவில்லை. அவரது பாதத்தருகே வந்து சூட்கேஸை கீழே வைத்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள். பிறகு அவர் கால் பாதத்தை கைகளால் அழுத்தி அதில் கிடைத்த புழுதியை எடுத்து தன் நெற்றியில் வைத்துக்கொண்டே கண்களை மூடியபடியே நின்றாள். பிறகு கால்களை, போனபடியே விட்டாள்.

வீட்டின் காம்பவுண்ட் கேட்டுக்கு வந்தபோது இன்னொரு தடவை அப்பாவை இறுதியாகப் பார்க்கலாமா என்றுகூட நினைத்தாள். வேண்டாம். ‘போகாண்டாம்’ என்று ஒரு வார்த்தை சொல்லாத அந்த சொந்தங்கள் சுகஜீவனம் செய்யும் வீட்டிற்குள், இனியொரு தடவை போக வேண்டாம். அப்பா ஏற்கெனவே செத்துவிட்டார். அப்படியே சாகவில்லையானாலும், அந்த உறவுக்காரர்களின் சுமை தாங்காது அந்த மூக்கு மூச்சு, ரோஷத்தோடு போய்விடும்.

வீதிக்கு வந்த அவளை ‘ஊர்ப்பிரமுகர்கள்’ கண்டுக்கவில்லை. வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார்கள். ராமக்கா, காத்தாயி, தங்கம்மா பாட்டி போன்ற பெண்கள் வாயடைத்துப் போய் நின்றார்கள். ‘போயிட்டு வாங்கம்மான்னு’ எப்படிச் சொல்ல? வாங்கம்மான்னு இந்த கேடு கெட்ட ஊருக்கு அவளை வரச் செல்லப்படாது. அதே சமயம் ‘போ’ என்று மொட்டையாகவும் சொல்ல முடியாது. ஆகையால் அந்த ஏழை பாளைகள், மொட்டை மரம்போல் கையை மட்டும் நெரித்தார்கள்.

‘கூத்து’ கோவிந்தன் அந்தப் பெண்களுக்குப் பின்னால் நின்றான். அவனை ரயில் நிலையம் வரை கூப்பிடலாமா? ஏன் கூப்பிட்டாலென்ன? கூடப் பிறக்காமலே பிறந்த அண்ணன் அவன். வேண்டாம். நான் கூப்பிட்டால்