பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தொட்டில்போல் ஆடிய ரயில் பெட்டிக்குள் மடியில் போட்டிருந்த பொட்டலத்தை மணிமேகலை பிரித்தாள். கண் கொட்டாது பார்த்தாள்.

அவள் கொடுத்த அதே தங்க வளையலும், ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களும் அதில் இருந்தன!

எழும்பூர் ரயில் நிலையத்தில், முன்பு எந்த இடத்தில் வந்து நிற்குமோ அந்த இடத்தில்தான் அவள் இருந்த பெட்டி வந்து நின்றது. ஆனால் அன்று எவன் எந்த இடத்தில் நின்று கையை ஆட்டினானோ அந்த இடம், அவளைப் பொறுத்த அளவில் காலியாகவே இருந்தது.

மணிமேகலை எல்லோரும் போகட்டும் என்பதுபோல் காத்திருந்தாள். வெளியே வெறுமை நிரம்பியதால், அவள் உள்ளேயே கண்களை விட்டுக் கொண்டிருந்தாள். ஆரவாரம் ஒய்ந்து கொண்டிருந்தபோது அந்த ஒய்ந்து போனவளும் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வெளியே இறங்கினாள். திடீரென்று பழக்கப்பட்ட குரல் ஒன்று, சிரிப்புக்கும், கும்மாளத்துக்கும் இடையே கணிரென்று ஒலிப்பது கண்டு அவள் திரும்பிப் பார்த்தாள்.

வெங்கடேசன் தன் மனைவியுடனும் மைத்துணிகளுடனும் இறங்க, மணமக்களுக்கு மாலைகள் போடப்பட்டன. ரோஜாப்பூ செண்டுகள் கொடுக்கப்பட்டன. சில ஆடவர்கள், அவனை முதன்முறையாகப் பார்ப்பது போல் நிமிர்ந்து பார்த்தார்கள். கை தட்டல்கள்! கை குலுக்கல்கள்! கண் சிமிட்டல்கள்! அவர்கள் ஒரு பெரிய